இந்திய அணியின் அடுத்த மேட்ச் வின்னர் இவர்தான். அடுத்த வருஷம் இவர் வேற லெவலில் இருப்பார் – நமன் ஓஜா

Pant

டெஸ்டில் கிரிக்கெட்டில் இருந்து இனி எண்ணி ஆறு ஆண்டுகளுக்கு யாரும் இவர்கள் இருவரையும் அவ்வளவு எளிதில் தூக்கி விட முடியாது. அதிலும் குறிப்பாக இவரது டெஸ்ட் இடத்தை இன்னும் சில ஆண்டுகளுக்கு யாராலும் அவ்வளவு எளிதில் நிரப்பி விட முடியாது. அந்த வீரர் வேறு யாருமில்லை இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான் . அவர் ஒரு மேட்ச் வின்னர் எனவே டெஸ்ட் கிரிக்கெட் பொறுத்த மட்டில் இன்னும் 6-7 ஆண்டு காலத்துக்கு யாரும் அவரை அசைக்க கூட முடியாது என்று சுனில் கவாஸ்கர் இவ்வாறு கூறியுள்ளார்.

pant 1

இந்நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுலை பற்றி முன்னாள் சக இந்திய வீரரான நமன் ஓஜாவை பற்றி பேட்டி கொடுத்துள்ளார். தொடர்ந்து சில வருடங்களாக ரிஷப் பண்டை நான் பார்த்து கொண்டு வருகிறேன். ஒவ்வொரு நாளும் தன்னை மெருகேற்றி கொண்டே போகிறார். பேட்டிங் என்று வந்து விட்டால் எதிரணியை கதி கலங்க செய்யும் அளவுக்கு சிறப்பான தன் ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார்.அதே சமயம் கீப்பிங்கிலும் தனது தனி திறமையை நாளுக்கு நாள் காட்டிக்கொண்டு வருகிறார்.

இவரால் டெஸ்டில் இந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியும் என்றால் நிச்சயம் இனி வரும் காலங்களில் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் தனது பேட்டிங் மற்றும் கீப்பிங் திறமையை மென்மேலும் மெருகேற்றி கொண்று தலை சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வருவார். மறுபக்கம் பண்டை போலவே கே எல் ராகுலும் நானும் சலைத்தவன் இல்லை என்பது போல தனக்கு வாய்ப்பு எபோதெல்லம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தனது கீப்பிங் திறமையை திறன் பட வெளிப்படுத்தி வந்த வண்ணம் உள்ளார்.

Pant

அவரது பிட்னெஸ் பத்தி நாம் புதிதாக பேச தேவையில்லை. அதே போல இக்கட்டான நிலைமைக்கு தனது அனி செல்லும் போதெல்லாம் கடேசி வரை நின்று தனது அணியை வெற்றி பெற செய்யும் மேட்ச் வின்னராக தன்னை உறுமாற்றி கொண்டு வருகிறார். இவர்கள் இருவருமே நாளைய இந்திய அணியின் திறன் மிகுந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக வலம் வர போகிறார்கள் அதில் எந்த ஒரு ஆச்சிர்யமும் இல்லை என்று இருவரை பற்றி புகழ் பாடினார் நமன் ஓஜா.

- Advertisement -

Pant-2

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் தனது வாய்ப்பை இழந்த ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய தொடர் மற்றும் இங்கிலாந்து தொடர் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு இப்போது இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.