இனிமேலும் காத்திருப்பது அர்த்தமில்லை. ஓய்வை அறிவித்த இந்திய வீரர் – வாய்ப்பு கிடைக்காத விரக்தி

Naman-ojha

உள்ளூர் கிரிக்கெட்டில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான நமன் ஓஜா தனது கிரிக்கெட் வாழ்க்கையை 2000த்தில் தொடங்கினார். ரஞ்சி டிராப்பியில் அதிக முறை பேட்ஸ்மேன்களை அவுட் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்த நமன் ஒஜா இதுவரை 141 முதல் தரவரிசைப் போட்டிகளில் பங்கெடுத்து 9753 ரன்கள் அடித்துள்ளார். அதில் 22 சதங்களும் 55 அரை சதமும் அடங்கும் அதிலும் குறிப்பாக இவர் ஒரு போட்டியில் அதிகபட்சமாக 219* ரன்களை அடித்துள்ளார்.

naman ojha 1

மேலும் லிஸ்ட் ஏ போட்டிகளில் 143 போட்டிகளிலும் மற்றும் 182 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி 113 போட்டிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத நமன் ஓஜா டெல்லி டேர்டெவில்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளில் விளையாடியுள்ளார்.

நமன் ஓஜா 2012ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டி தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ்காக விளையாண்டு அதிக ரன்கள் அடித்து பார்ட்னர்ஷிப் அமைத்த சாதனையை படைத்தார். 2018 ஐபிஎல் போட்டி தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டெல்லி அணிக்காக கடைசியாக விக்கெட் கீப்பிங் செய்வதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டது,

naman ojha 2

தனக்கு கொடுத்த வாய்ப்பை ஓஜா சரியாக பயன்படுத்தவில்லை, அதற்கு அடுத்தடுத்த போட்டிகளிலும் இவர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய அளவில் விளையாடவில்லை. இதனால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். மேலும் அதனைத்தொடர்ந்து அவரை ஏலத்தில் எடுக்க எந்தவொரு அணியும் முனைப்பு காட்டவில்லை.

- Advertisement -

naman ojha 3

2015 இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விருத்திமான் சஹாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது அதில் 56 ரன்கள் அடித்து அசத்தினார். மேலும் விக்கெட் கீப்பிங்கிலும நாலு கேட்சுகளும் ஒரு ஸ்டம்பிங்கும் செய்து பாராட்டுகளைப் பெற்றார்.சர்வதேச போட்டிகளில் இவர் ஒரு டெஸ்ட் போட்டி ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 2 டி20ஐ போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.