எங்ககிட்ட இது இருக்கு.. மறுபடியும் சொல்றேன் இந்திய தொடரில் 12 வருட சாதனையை உடைப்போம்.. சான்டோ உறுதி

Najmul Santo
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் அத்தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏனெனில் கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் எந்த அணிக்கு எதிராகவும் இந்தியா ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட சாம்பியன் வீரர்கள் இந்திய அணியில் நிறைந்துள்ளனர். ஆனால் சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

மறுபடியும் சொல்றேன்:

அதே போல இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று பாகிஸ்தானை வீழ்த்திய கையோடு வங்கதேச கேப்டன் நஜ்முல் சான்டோ சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானை வீழ்த்தியதால் தங்களுக்கு மிகப்பெரிய உத்வேகமும் வலுவான தன்னம்பிக்கையும் கிடைத்துள்ளதாக நஜ்முல் சான்டோ தெரிவித்துள்ளார். அதனால் தங்களின் அடுத்த தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஈஎஸ்பிஎன் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் நம்பிக்கை. நீங்கள் வெற்றி பெறும் போது நன்றாக உணர்வீர்கள். அந்த தருணங்களை நீங்கள் என்ஜாய் செய்வது முக்கியம். வங்கதேச கிரிக்கெட்டில் அது போன்ற தருணம் இதற்கு முன் நடைபெற்றதில்லை”

- Advertisement -

12 வருடத்தை மாற்றுவோம்:

“கிரிக்கெட்டர்கள் எப்போதும் குறிப்புகளை பார்ப்பார்கள். அது போன்ற குறிப்பு தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளது. அதனால் வெளிநாட்டில் வெற்றி பெறுவதற்கான திறன் எங்களிடம் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். எனவே அடுத்த முறை நாங்கள் விளையாடும் போது அதன் முடிவு பற்றி எங்களுக்கு தெரியாது. ஆனால் அத்தொடரில் எங்களால் வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை எங்களிடம் உறுதியாக இருக்கிறது”

இதையும் படிங்க: ரோஹித் ஒரு நல்ல கேப்டன் மட்டும் இல்ல.. அவர் ஒரு லீடர்.. ஏன் தெரியுமா? – பியூஷ் சாவ்லா பகிர்வு

“சாதனைகள் ஒரு நாள் உடைக்கப்படுவதற்காகவே படைக்கப்படுகிறது என்பதை பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முந்தைய நாள் நான் சொன்னேன். எங்களுடைய வீரர்களின் கடின உழைப்பை பார்த்த பின் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கூறினார். அந்த வகையில் 12 வருடங்களாக சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போடும் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று சான்டோ மீண்டும் வலுவான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement