எங்களுக்கு இதுவே தெரியல.. 140 – 150க்கு பழகுனா எப்படி இந்தியாவை ஜெய்க்க முடியும்.. வங்கதேச கேப்டன் பேட்டி

Najmul Santo
- Advertisement -

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் வங்கதேச கிரிக்கெட் அணி படுதோல்வியை சந்தித்தது. அதனால் பாகிஸ்தானை போல இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேச கேப்டன் நஜ்முல் சான்டோ ஏமாற்றத்தை சந்தித்தார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் போட்டி நாளன்று யார் அசத்துகிறார்களோ அவர்களே வெல்வார்கள் என்று அவர் கூறியிருந்தார்.

எனவே பெரிய அணியாக இருந்தாலும் டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வங்கதேசம் வெல்லும் என்று அவர் மீண்டும் சவால் விடுத்திருந்தார். ஆனால் குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவிடம் பேட்டிங்கில் தடுமாறிய வங்கதேசம் 127 ரன்களுக்கு சுருண்டது. அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இந்தியா 11.5 ஓவரில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கி வென்றது.

- Advertisement -

தோல்விக்கு காரணம்:

இந்நிலையில் தங்களுடைய நாட்டில் பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருப்பதாக வங்கதேச கேப்டன் நஜ்முல் சான்டோ கூறியுள்ளார். அதனால் தங்களுடைய அணி பெரும்பாலும் 140 – 150 ரன்கள் மட்டுமே அடிக்க பழகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதனால் இந்தியா போன்ற வேகம், பேட்டிங்க்கு சாதகமான மைதானங்களில் தங்களுக்கு 180 ரன்களை எப்படி அடிக்க வேண்டும் என்பது கூட தெரியவில்லை என்று சான்டோ வேதனை தெரிவித்துள்ளார்.

அதனாலேயே இந்தியாவை தங்களால் வீழ்த்த முடியவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எங்களிடம் திறமை இருக்கிறது. ஆனால் நாங்கள் எங்கள் திறமையில் முன்னேறுவதற்கான இடமும் இருக்கிறது. நாங்கள் கடந்த 10 வருடங்களாக இப்படித்தான் பேட்டிங் செய்கிறோம். சில நேரங்களில் மட்டுமே அசத்துகிறோம். எங்களுடைய சொந்த ஊரில் பெரும்பாலும் நாங்கள் 140 – 150 ரன்கள் அடிக்கக்கூடிய பிட்ச்சில் விளையாடுகிறோம்”

- Advertisement -

180 ரன்ஸ் அடிக்கடி தெரியல:

“அதனால் எங்களுடைய பேட்ச்மேன்களுக்கு எப்படி 180 ரன்கள் அடிக்க வேண்டும் என்பது தெரியவில்லை. அதற்காக பிட்ச்சை மட்டும் நான் குறை சொல்லவில்லை. நாங்கள் எங்களுடைய திறமை மற்றும் மனநிலையை கருத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம் நாங்கள் மோசமாக விளையாடினோம் என்றும் சொல்ல மாட்டேன்”

இதையும் படிங்க: பஸ்பால், கம்பீர் பால் கிடையாது.. ரோஹித் உருவாக்கிய அதிரடிக்கு இது தான் புதிய பெயர்.. கவாஸ்கர் பேட்டி

“இதை விட நாங்கள் சிறந்த அணி. இந்த பார்மட்டில் நீண்ட காலமாக நாங்கள் நன்றாக செயல்படவில்லை. அதற்காக நாங்கள் மோசமான அணி என்று அர்த்தம் இல்லை. குறிப்பிட்ட வீரர்களையும் குறை சொல்ல விரும்பவில்லை. நாங்கள் அதிரடியாக ரன்கள் குவிக்கிறோம். ஆனால் சில நேரங்களில் பந்தை தேர்ந்தெடுத்து விளையாடுவது அவசியம். எங்களுடைய அணுகுமுறையை அவசரப்படுத்த முடியாது” என்று கூறினார்.

Advertisement