- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நான் ரமீஸ் ராஜாவை விட ரொம்ப ஸ்ட்ரிக்ட் எங்களோட மோதாதிங்க, ஜெய் ஷா’க்கு புதிய பாக் தலைவர் எச்சரிக்கை – வெளியான தகவல்

கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் மட்டுமே மோதி வருகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் துபாய் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் மோதிய இவ்விரு அணிகளும் அடுத்ததாக 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் மோதுவதற்கான அட்டவணை இருந்தாலும் அது நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. ஏனெனில் 2022ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பொறுப்பேற்ற பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தலைமையில் 2023 ஆசிய கோப்பை நடத்தும் உரிமையை உறுப்பு நாடுகளின் சம்மதத்துடன் பாகிஸ்தான் வாங்கியது.

ஆனால் எல்லை பிரச்சினை காரணமாக இந்திய அரசின் அனுமதியின்றி பாகிஸ்தானுக்கு சென்று ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்த ஜெய் ஷா அத்தொடரை துபாய் போன்ற பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் வாரியம் தங்கள் நாட்டில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பங்கேற்க வரவில்லை என்றால் அதே 2023இல் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

- Advertisement -

நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்:
அதை உறுதிப்படுத்திய அப்போதைய பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா நாங்கள் பங்கேற்கவில்லை என்றால் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை யார் பார்ப்பார் என்றும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் ஜெய் ஷா தலைமையில் பிப்ரவரி 4ஆம் தேதியன்று பக்ரைனில் நடைபெற்ற ஆசிய கவுன்சில் கூட்டத்தில் இந்த விவாதத்தை பாகிஸ்தான் வாரியம் எழுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதற்குப் பிடி கொடுக்காத ஜெய் ஷா 2023 ஆசிய கோப்பை நடைபெறும் இடத்தை முடிவு செய்யாமல் அதை மார்ச் மாதம் நடைபெறும் அடுத்த கூட்டத்திற்கு தள்ளி வைத்து விட்டு சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் மார்ச் மாத கூட்டத்தில் 2018 போலவே 2023 ஆசிய கோப்பையை அமீரகத்துக்கு நகர்த்துவதற்கான முதற்கட்ட பேச்சையும் ஜெய் ஷா துவக்கியுள்ளதாக தெரிய வருகிறது. அதனால் ஏமாற்றமடைந்த புதிய பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜாம் செதி 2023 ஆசிய கோப்பை மட்டும் பாகிஸ்தானிலிருந்து நகர்த்தப்பட்டால் 2023 அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் தங்களது நாடு பங்கேற்காது என்று ஜெய் ஷா’க்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இது பற்றி ஜியோ டிவி, இஎஸ்பிஎன்க்ரிக்இன்போ, கிரிக்கெட் பாகிஸ்தான் ஆகிய 3 இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு. “இம்முறை நடைபெற்ற ஆசிய கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் வாரியம் முன்வைத்த சில கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனால் பாகிஸ்தானில் இந்தியா விளையாடாமல் போனால் இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் பாகிஸ்தான் விளையாடப் போவதில்லை என்பதை பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜாம் செதி ஜெய் ஷா அவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நஜாம் செதி அவர்களின் இந்த முடிவு ஜெய் ஷா’க்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் அவர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது முன்பிருந்த தலைவர் ரமீஷ் ராஜா ஊடகங்களில் மட்டுமே வாய் வார்த்தைகளாக பேசி வந்த நிலையில் தற்போது “அவரை விட நான் ஸ்ட்ரிக்ட்” என்பது போல் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை புதிய தலைவர் நஜாம் செதி ஜெய் ஷா’விடம் நேரடியாக தெரிவித்து எச்சரிக்கையும் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நான் அப்படி விளையாடியும் எனக்கு வாய்ப்பு கிடைக்காதது வருத்தம் தான். ஐ.பி.எல் குறித்து மனம்திறந்த – சத்தீஸ்வர் புஜாரா

இதனால் இந்த விவகாரத்தில் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஐசிசியை மிஞ்சி உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருக்கும் பிசிசிஐ செயலாளராகவும் ஆசிய கவுன்சிலுக்கே தலைவராகவும் இருக்கும் ஜெய் ஷா எடுக்கும் முடிவு தான் இந்த விஷயத்தில் இறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -