- Advertisement -
ஆசிய கோப்பை

பாகிஸ்தானிடம் இந்தியா மன்னிப்பு கேட்டுடாங்க.. அவங்க எங்கப் பக்கம்.. வாரியத் தலைவர் உருட்டல் பேட்டி

ஆசியக் கோப்பை 2025 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணி கை கொடுக்காமல் வெளியேறியது சர்ச்சையை உண்டாக்கியது. சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டாஸ் வீசிய பின்பும் போட்டி முடிந்த பின்பும் கை கொடுக்கவில்லை.

அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் வாரியம் இந்திய அணி மீது ஐசிசியிடம் புகார் செய்தது. மேலும் டாஸ் வீசும் நிகழ்வில் இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளாதீர்கள் என்று நடுவர் ஆண்டி ஃபைகிராப்ட் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. எனவே அவரை நீக்காவிட்டால் ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறுவோம் என்றும் பாகிஸ்தான் அறிவித்தது.

- Advertisement -

இந்தியா மன்னிப்பு கேட்டுட்டாங்க

இருப்பினும் போட்டியின் முடிவில் கை கொடுப்பது கட்டாயம் என்று ஐசிசி விதிமுறை சொல்லவில்லை. எனவே இந்திய அணி மீது ஐசிசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நடுவர்களுக்கான அடிப்படை விதிமுறைகளை மீறாத ஆண்டி ஃபைக்ராப்டை ஆசியக் கோப்பையிலிருந்து நீக்கும் பாகிஸ்தான் வாரியத்தின் கோரிக்கையையும் ஐசிசி நிராகரித்தது.

அதனால் நேற்று அமீரகத்துக்கு எதிரான போட்டியிலிருந்து பாகிஸ்தான் விலக உள்ளதாக செய்திகள் வந்தன. அதற்கேற்றார் போல் பாகிஸ்தான் – அமீரகம் போட்டி 8 மணிக்குத் துவங்கவில்லை. அப்போது பாகிஸ்தான் வாரியத்தின் இந்நாள் முன்னாள் தலைவர்கள் பங்கேற்ற அவசரக் கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடப்பதாக செய்திகள் வெளியாகின. அதில் ஆசிய கவுன்சிலிடமிருந்து பங்கு பணம் கிடைக்காமல் பாகிஸ்தானுக்கு பல லட்சம் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்பது விவாதிக்கப்பட்டது.

- Advertisement -

தலைவர் உருட்டு:

அதன் முடிவில் ஆண்டி பைகிராஃப்ட் தங்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டதாக அறிவித்த பாகிஸ்தான் வாரியம் தொடர்ந்து ஆசியக் கோப்பையில் விளையாடுவதாக தெரிவித்தது. அதற்கு ஆதாரமாக ஃபைகிராப்ட் மன்னிப்பு கேட்கும் வீடியோவையும் அந்நாட்டு வாரியம் ட்விட்டரில் வெளியிட்டது. ஆனால் ஒலியில்லாத அந்த வீடியோவில் ஃபைகிராப்ட் எங்கேயும் மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை.

இந்நிலையில் இந்தியாவும் நடுவரும் தங்களிடம் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜாம் சேதி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ரமீஸ் ராஜா, தற்போதைய தலைவர் மோசின் நக்வி ஆகியோருடன் கூட்டாக இஸ்லாமாபாத்தில் பேசியது பின்வருமாறு. “விளையாட்டில் அரசியல் இருக்கக்கூடாது என்பதே பாகிஸ்தானின் நோக்கம். நான் தலைவராக இருந்த போது கொண்டிருந்த நோக்கமே இப்போதும் இருக்கிறது”

இதையும் படிங்க: அந்த இந்திய அணியில் கூடவா ருதுராஜ்க்கு இடமில்லை? அகர்கரின் அநியாயத்தை சாடிய ஆகாஷ் சோப்ரா

“அவர்களைப் (இந்தியா) போல் நாங்கள் அரசியல் செய்யவில்லை. நாங்கள் மன்னிப்புக் கோரினோம். அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். அதனால் கிரிக்கெட் வென்றுள்ளது. உலகம் எங்கள் நிலைப்பாட்டை ஆதரிக்கும். இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு உலகத்தின் எதிர்வினை இருப்பதை நீங்கள் அனைவரும் பார்க்கிறீர்கள்” என்று கூறினார்.

- Advertisement -