BAN vs AFG : நாங்கள் பேட்டிங்கில் வைத்திருந்த இந்த பிளான் எடுபடவில்லை – நயிப் பேட்டி

உலகக் கோப்பை தொடரின் 31 ஆவது போட்டி நேற்று சவுதாம்டன் நகரின் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் மோர்தசா தலைமையிலான ஒரு வங்கதேச அணியும், குல்பதின் நயிப் தலைமை

Naib
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 31 ஆவது போட்டி நேற்று சவுதாம்டன் நகரின் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் மோர்தசா தலைமையிலான ஒரு வங்கதேச அணியும், குல்பதின் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

ban vs afg

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக முஸ்டபிகுர் ரஹீம் 83 ரன்களையும், ஷாகிப் 51 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவர்களில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணி சார்பாக சாகிப் சிறப்பாக பந்து வீசி 29 விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் அவரை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

shakib

போட்டி முடிந்து பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் நயிப் கூறியதாவது : கடைசி போட்டி கடினமாக இருந்தது ஆனால் இன்றைய போட்டியில் நாங்கள் பந்துவீசும் போது 30 முதல் 40 ரன்கள் வரை அதிகமாக கொடுத்து விட்டோம். இந்த மைதானம் மெதுவாக இருந்தது எனவே ஸ்பின்னர்களுக்கு இந்த மைதானம் கைகொடுத்தது மேலும் இது பேட்டிங் செய்ய எளிதான மைதானமாக இருந்தது.

வங்கதேச அணியில் சாகிப் அருமையாக பந்துவீசினார். மேலும் நாங்கள் பேட்டிங்கில் அதிகமாக பவுண்டரிகளை அடிக்காமல் ரன்களை ஓடி இலக்கினை துரத்த திட்டமிட்டோம் ஆனால் அந்த திட்டம் இன்று எடுபடவில்லை. இது போன்ற பெரிய தொடர்களில் முன்னேற்றம் என்பது தேவையான ஒன்றாகும், இதற்கான பயிற்சியும் தேவை என்று நயிப் கூறினார்.

Advertisement