- Advertisement -
உலக கிரிக்கெட்

Afg vs Aus : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வி எங்களுக்கு வருத்தமில்லை – கேப்டன் நயிப் பேட்டி

உலக கோப்பை தொடரின் நான்காவது போட்டி நேற்று கவுண்டி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் 207 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக நஜிபுல்லா 51 ரன்களை அடித்தார். ரஷீத் கான் அதிரடியாக ஆடி 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பிறகு 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வார்னர் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் குவித்தார். பின்ச் 66 ரன்களை குவித்தார். ஆட்டநாயகனாக வார்னர் தேர்வானார்.

போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் நயிப் கூறியதாவது : ஆஸ்திரேலியா ஒரு சாம்பியன் அணி அவர்களுக்கு எதிராக நாம் தவறுகளை குறைவாக செய்ய வேண்டும் இல்லையென்றால் அவர்கள் எளிதாக நம்மை வீழ்த்தி விடுவார்கள். எங்களது அணி துக்கம் சரியாக அமையவில்லை. இருப்பினும், பின் வந்த வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து ஓரளவு சுமாரான ரன்களை குவித்தனர்.

இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இனி வரும் போட்டிகளில் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன். முஜீப் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் இந்த மைதானத்தில் சிறப்பாக பந்துவீசி தாக நினைக்கிறேன். இனிவரும் போட்டிகளில் எங்களது அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோற்றது எங்களுக்கு வருத்தம் இல்லை. எங்களுடைய போராட்டம் நன்றாகவே அமைந்தது என்று நயிப் கூறினார்.

- Advertisement -
Published by