தோனி கொடுத்த இந்த ஒரு ஐடியா தான் கெயில்ல ஈஸியா அவுட் ஆகிட்டேன் – சபாஷ் நதீம் பெருமிதம்

Nadeem
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சீனியர் விக்கெட் கீப்பருமான தோனி ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொடுக்கும் பல டிப்ஸ்களுக்கு பின்பு பவுலர்கள் அவ்வப்போது விக்கெட் வீழ்த்தி வருவதை நாம் பார்த்துள்ளோம். ஸ்டம்புக்கு பின்னால் நின்று ஆட்டத்தின் தன்மையையும், பேட்ஸ்மேனின் எண்ணத்தையும் உற்று கவனிப்பதில் தோனிக்கு நிகர் யாரும் இல்லை என்றால் அது மிகை அல்ல.

Nadeem

- Advertisement -

அந்த அளவுக்கு பேட்ஸ்மேனுடைய மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு எதிராக எவ்வாறு பந்து வீசினால் விக்கெட் வீழ்த்தலாம் என்ற ஐடியா தெரிந்தவர் தோனி. இதனை நாம் பலமுறை சர்வதேச போட்டியில் கண்டுள்ளோம். அந்த வகையில் தோனியின் ஆலோசனையை கேட்டு அதன்படி விக்கெட் வீழ்த்திய ஸ்பின்னர்களில் ஒருவர் தான் சபாஷ் நதீம். அப்படி தோனி சொல்லும் ஆலோசனையை அப்படியே கேட்டு அதன்படி பந்துவீசி விக்கெட் வீழ்த்திய சம்பவத்தினை அவர் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ள சபாஷ் நதீம் ஐபிஎல் தொடரில் 2011 ஆம் ஆண்டில் இருந்து 18 ஆம் ஆண்டு வரை டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு சன்ரைஸ் அணியில் விளையாடினார். இந்நிலையில் டோனி குறித்த அந்த அனுபவத்தை பற்றி சபாஷ் நிதின் கூறுகையில் :

Nadeem

2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னர் விஜய் ஹசாரே டிராபி தொடரின்போது ஜார்கண்ட் அணியில் நான் ஆடிய சமயத்தில் தோனியுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தோனியுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது கெயிலுக்கு எதிராக எவ்வாறு பந்து வீச வேண்டும் என்று நான் தோனியிடம் ஆலோசனை கேட்டேன். அதற்கு பதில் அளித்த தோனி : முதலில் இதுவரை கெயிலுக்கு நீ பந்து வீசியது இல்லை.

- Advertisement -

அப்படி ஒருவேளை பந்துவீச கூடிய நிலைமை வந்தால் கெயிலின் பலத்திற்கு ஏற்றவாறு ஈஸியான ஏரியாவில் பந்தினை வீசக்கூடாது. பந்தை அவரிடமிருந்து நன்றாக விலக்கி வீச வேண்டும் அல்லது அவரது கால்களை நோக்கி உள்ளே வருமாறு பந்து வீச வேண்டும். அப்படி வீசினால் அவரால் பெரிய ஷாட்களை ஆடமுடியாது. சிங்கிள் மட்டுமே எடுப்பார் இதனால் ஏற்படும் பிரஷர் அவரை வீழ்த்த உதவும் என்று தோனி தனக்கு ஆலோசனை வழங்கியதாக சபாஷ் நதீம் தெரிவித்துள்ளார்.

Gayle

மேலும் 2017 ஆம் ஆண்டு கெயிலுக்கு எதிராக பந்து வீச ஒரு வாய்ப்பு கிடைத்தபோது அப்போது டெல்லி அணி கேப்டன் ஜாஹீர் கான் என்னிடம் பந்தை கொடுக்க நான் வீசிய மூன்றாவது பந்திலேயே தோனியின் அறிவுரைப்படி கெயிலை வீழ்த்தினேன் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement