- Advertisement -
இந்திய கிரிக்கெட்

29 வயதான தமிழக வீரரை உடனடியாக இங்கிலாந்துக்கு அழைத்த இந்திய அணியின் நிர்வாகம் – விவரம் இதோ

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாகவே இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயம் ஏற்பட்டு நான்காவது போட்டியில் விளையாட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். அதோடு ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டியும் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்தே வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இந்திய அணிக்கு வரும் மேலும் ஒரு தமிழக வீரர் :

அதோடு தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பண்டின் கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அந்த வலியடனும் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அவருக்கு பதிலாக தற்போது துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டு வருகிறார். அதனால் நிச்சயம் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பண்ட் பேட்டிங் செய்தாலும் அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது என்பது உறுதி. அதோடு அடுத்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் நிச்சயம் விளையாட மாட்டார் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்திய அணியில் மாற்று விக்கெட் கீப்பருக்கான தேடல் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்திய அணியில் துருவ் ஜுரேல் இடம் பெற்றிருந்தாலும் பண்டின் பூர்த்தி இடத்தை பூர்த்தி செய்ய ஒரு விக்கெட் கீப்பரை கொண்டு வரவேண்டும் என்பதற்காக இஷான் கிஷன் இந்திய அணியில் இணைவார் என்று பேசப்பட்டது. ஆனால் தற்போது இஷான் கிஷனை தாண்டி தமிழக வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அந்தவகையில் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் 29 வயதான நாராயணன் ஜெகதீசனை இந்திய அணி அழைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட ஜெகதீசன் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் வேளையில் தற்போது அவர் முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஹீரோ ஆஃப் தி டே.. ஒட்டுமொத்த ரசிகர்களையும் எழுந்து நின்று கைதட்ட வைத்த ரிஷப் பண்ட் – நெகிழ்ச்சி தருணம்

இதன் காரணமாக தற்போது கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரவிருக்கும் ஜெகதீசன் அங்கிருந்து விசா நடைமுறைகளை முடித்துக்கொண்டு இன்னும் சில தினங்களில் இங்கிலாந்து சென்று இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரேல் தான் ஆடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதி என்றாலும் தமிழக வீரரான நாராயணன் ஜெகதீசன் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியுடன் இணைய இருப்பது அவருக்கு ஒரு நல்ல அனுபவத்தை தரும்.

- Advertisement -