மிகப்பெரும் சுழற்பந்து ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற ரஷீத்கான்..!

rashidspin

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சூழல் பந்து வீச்சாளராக இருந்து வருபவர் இளம் வீரர் ரஷீத் கான். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி பல பாராட்டுகளை பெற்ற ரஷீத் கான், ரஷீத் கானை இந்திய வீரரான சச்சினும் உலகின் சிறந்த பௌலர் ரஷீத் கான் தான் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சூழல் பந்து வீச்சில் ஜாம்பவானாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஒருவர் இவரை பாராட்டியுள்ளாராம்.

rashidkhan

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடிய ரசித்த கான், 17 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்களை எடுத்திருந்தார். மேலும், அவர் விளையாடிய ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இருந்துவந்தார்.

இலங்கை அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமைக்குரியவர். அப்படிப்பட்ட பந்து வீச்சின் ஜாம்பவனான முரளி தரன் இளம் வீரரான ரஷீத் கானை பாராட்டியுள்ளாராம்.

muralitharan

சமீபத்தில் ரஷீத் கான் ‘பிரேக் பாஸ்ட் வித் சாம்ப்பியன்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.அப்போது முரளிதரனை பற்றி பேசிய அவர் ‘முரளிதரன் ஒரு மிகப்பெரிய ஜாம்பவான். நான் ஹைதராபாத் அணியில் விளையாடிய போது , முரளிதரன் என்னிடம் ‘ என்னை விட நீ தான் திறமையானவர் ‘ என்று கூறினார்’ என்று ரசீத் கான் தெரிவித்துளளார்.