அடுத்த முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் தோனி க்கு பதில் இவர்தான் ?

dhonii

வரும் மார்ச் மாதம் முதல் இந்தியா,இலங்கை,வங்கதேச அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. மார்ச் 6ம் தேதி தொடங்கி மார்ச் 18ம் தேதிவரையில் நடக்கவுள்ள இந்த கிரிக்கெட் திருவிழா இலங்கையின் சுதந்திரமடைந்த 70ஆம் ஆண்டின் நினைவாக நடைபெறவுள்ளது.

kohli

இந்த தொடரின் முதல்போட்டியானது இந்தியா-இலங்கை அணியிடையே நடைபெறுகின்றது. இறுதிப்போட்டியானது 18ம் தேதி நடைபெறவுள்ளது.

- Advertisement -

தொடர்ந்து ஓய்வின்றி தோனி, கோலி மற்றும் பாண்டியா ஆகியோர் பலதொடர்களில் விளையாடி வருவதால் இந்த தொடரில் அவர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் தேர்வுக்குழுவினர் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

rahul

ஏற்கனவே விராட்கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என்ற நிலையில் தற்போது தோனிக்கு பதிலாக டெல்லியை சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இத்தொடரில் களமிறக்கப்படுவார் என்று தெரிகின்றது.

- Advertisement -
Advertisement