இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் விளையாடுவது சந்தேகம் தான் – விவரம் இதோ

Ban

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நாக்பூர் விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Toss

இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்கும் பங்களாதேஷ் அணியிலிருந்து இரண்டு வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது. அதன்படி மொசடாக் மற்றும் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால்ல் நேற்றைய பயிற்சி போட்டியில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

எனவே பயிற்சியில் கலந்து கொள்ள முடியாத முஸ்தபிசுர் ரஹ்மான் இன்றும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. இதுவும் இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.

ஏனெனில் ஏற்கனவே ஷகிப் அல் ஹசன், தமீம் இக்பால் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் தவித்து வரும் அந்த அணி தற்போது முக்கியமான விக்கெட்டைக் டேக்கிங் பந்து வீச்சாளரான முஸ்தாபிஜூர் ரஹ்மான் அணியில் விளையாட முடியாமல் போனால் இந்திய அணி வங்கதேச அணியை எளிதில் வீழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது

- Advertisement -