சீனியர் வீரராக இருந்தும் ஓய்வுக்கு வற்புறுத்தும் நிர்வாகம் – மனம் வருந்தி பேசிய பங்களாதேஷ் கேப்டன்

Mortaza
- Advertisement -

வங்கதேச அணியின் கேப்டனாக இருந்தவர் மஷ்ரஃப் மோர்டசா. இவருக்கு தற்போது 36 வயதாகிறது. கடந்த 19 வருடங்களாக வங்கதேச அணிக்காக விளையாடி வருகிறார். 220 ஒருநாள் போட்டிகளிலும் 36 டெஸ்ட் போட்டிகளிலும் 54 டி20 போட்டிகளிலும் அந்த அணிக்காக விளையாடியுள்ளார்.
மேலும் உலக கோப்பை தொடரின் தோல்விக்கு பின்னர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

Mortaza 2

- Advertisement -

இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இவரை தொடர்ந்து ஓய்வு அறிவிக்குமாறு கட்டாயப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசியுள்ளார் மாஷ்ரஃப் மோர்டேசா கூறுகையில்..நான் தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவதில் மட்டும் குறியாக இருக்கிறேன். எங்களது கிரிக்கெட் நிர்வாகம் நான் சொல்வதை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

2019 உலக கோப்பை தொடருக்கு முன்னர் மூன்று தொடர்கள் நடைபெற்றது. அந்த தொடரில் அனைத்திலும் நான் தான் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறேன். அவற்றையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்கள். ஒரு போட்டியில் சொதப்பி விட்டாலும் கூட அதனைப் பெரிதாக்கி விடுகிறார்கள். இதன் காரணமாகத்தான் என்னை ஓய்வு பெறச் சொல்லி வருகிறார்கள் என்று தோன்றுகிறது.

மேலும் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டிய நேரம் வந்தது அதனால் கேப்டன் பதவியை துறந்தேன். அதே நேரத்தில் எனது அரசியலுக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமில்லை. இரண்டையும் தனித்தனியாக மிகச் சரியாக செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.இவருக்கு தற்போது 36 வயதாகிறது.

இவரும் சீக்கிரம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்றே தெரிகிறது. மேலும் இவரை விட மிகவும் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்கள் வங்கதேச அணிக்கு வந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை தான். இருப்பினும் சீனியர் வீரரான இவரை இதுபோன்று வழி அனுப்புவதை விட முறையாக வழியனுப்பும் போட்டி வைத்து விடைகொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement