இதுக்கு மேலயும் இந்தியாவை விட்டு வைக்க மாட்டோம். அதற்கு நாங்கள் தயாராக இல்லை – முஷ்பிகுர் ரஹிம் வெளிப்படை

Rahim
- Advertisement -

பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி தோற்கடித்து சர்வதேச அரங்கில் இந்திய அணியை முதல் முறையாக வீழ்த்தி வங்கதேசம் சாதனை படைத்தது.

ban 1

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் சீனியர் வீரரான முஷ்பிகுர் ரஹிம் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் இந்த வெற்றி குறித்து பேட்டி அளித்த முஷ்பிகுர் ரஹிம் கூறியதாவது : இந்தியாவுக்கு எதிராக ஏராளமான போட்டிகளில் வெற்றி வரை வந்து தோல்வி அடைந்திருக்கிறோம். ஆதலால் இந்த முறை இந்தியாவுக்கு எதிராக எந்த போட்டியிலும் வெற்றியை நழுவ விடக்கூடாது என்று நினைத்தோம்.

- Advertisement -

இனிமேல் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு இந்த தொடரில் பங்கேற்றோம். நான் 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன் எனக்கு இந்த கடந்த இரண்டு வாரங்கள் மிக கடினமாக இருந்தது. சில போட்டிகளில் வெற்றி கிடைத்தால் அனைத்தும் சரியான வகையில் வங்கதேச அணிக்கு வந்து சேரும்.

ban 2

அதேபோன்று இந்தியா விட்டு கிளம்பும் முன் இந்திய அணிக்கு எதிராக தொடரை வென்று காட்டுவோம் என்று திட்டமிட்டு இந்த தொடரில் விளையாடி வருகிறோம். எனவே இனி இந்தியாவுக்கு எதிராக வெற்றியை பறிகொடுக்கவும், இந்த தொடரை இழக்கவும் நாங்கள் தயாராக இல்லை மீதி உள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம் என்று முஷ்பிகுர் ரஹிம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement