அவர் ஒருத்தரை மட்டுமே நம்பி இருந்தா வேலைக்காகாது. இந்திய அணியை எச்சரித்த – முத்தையா முரளிதரன்

murali

நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணியானது பாகிஸ்தான் அணி வீரர்களின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் மோசமான தோல்வியை சந்தித்தது. இதன்காரணமாக ரன் ரேட்டிலும் இந்திய அணிக்கு ஒரு பெரிய சறுக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக 2-வது லீக் போட்டியில் துபாய் மைதானத்தில் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்கும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

varun 1

மேலும் முதல் போட்டியில் இந்திய அணி தோற்றுவிட்டதால் இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்திய அணியில் செய்ய வேண்டிய சில விடயங்கள் குறித்தும் தங்களது வெளிப்படையான கருத்தினை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்திய அணியில் இருக்கும் தற்போதைய பலவீனம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் பந்துவீச்சு தற்போது பும்ராவை மட்டும் தான் அதிகமாக சார்ந்துள்ளது. பும்ரா ஒரு சிறப்பான பவுலர் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இருப்பினும் அவர் ஒருவர் மட்டுமே நம்பி இருப்பது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.

bumrah 2

நிச்சயம் இந்திய அணியில் இன்னொரு லெக் ஸ்பின்னர் அல்லது அஷ்வின் ஆகியோர் தேவை ஏனெனில் அணியின் பந்துவீச்சில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தால் தான் இந்திய அணி சமபலத்துடன் திகழும். மேலும் ஹார்டிக் பாண்டியா பந்துவீசும் பட்சத்தில் இந்திய அணி பலமாக மாறும் என்றும் முரளிதரன் கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : மருத்துவமனையில் தாய் வெண்டிலேட்டர் சிகிச்சை. இந்தியாவை பந்தாடிய பாக் வீரர் – இவருக்கு இப்படி சோகமா?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தாங்கள் எவ்வளவு பலமான அணி என்பதை நிரூபித்துள்ளனர். அவர்கள் தற்போது சிறப்பாக விளையாடி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர் எனவும் முரளிதரன் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement