தமிழக வீரரான அஷ்வினால் மட்டுமே என்னுடைய இந்த சாதனையை முறியடிக்க முடியும் – முரளிதரன் ஓபன்டாக்

Ashwin

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரராக இலங்கை அணியின் ஜாம்பவான் முரளிதரன் திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தொடர்ந்து உலகில் உள்ள பல்வேறு பணிகளுக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அவர் செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அவர் எடுத்த 800 விக்கெட்டுகள் என்ற சாதனையை யாராலும் நெருங்க கூட முடியவில்லை.

muralitharan 1

மேலும் அந்த சாதனையை யார் எட்டுவார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டால் அவரது சாதனையை எட்டுவது என்பது ஒரு எட்டாக் கனி என்றே கூறலாம் .ஆனாலும் அஸ்வின் மற்றும் லயன் ஆகியோர் அவரது சாதனையை சற்று நெருங்கி வருகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமாகி அஸ்வின் இதுவரை 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 377 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதேபோல 2011ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான லயன் 99 கிரிக்கெட் போட்டிகளில் 396 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அளவில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள், ஹர்பஜன் 417 விக்கெட்டுகள் மற்றும் கபில்தேவ் ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் அஸ்வின் தற்போது உள்ளார். மேலும் விரைவில் அஷ்வின் கபில் தேவ் மற்றும் ஹர்பஜன் ஆகியோரது சாதனையை தகர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ashwin-3

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் எடுத்த 800 விக்கெட்டுகளை நெருங்கும் ஒரே பந்துவீச்சாளர் தற்போதைக்கு அஸ்வின் தான் என்று முத்தையா முரளிதரன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

Lyon

இப்போது இருக்கும் இளம் வீரர்களின் யாரும் 800 விக்கெட்டுகளை எட்டுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 800 விக்கெட்டுகளை முதலாவதாக எட்டுவார் என நம்புகிறேன். ஏனெனில் லயனுக்கு 396 விக்கெட்டுகளை எடுக்க அதிக போட்டிகள் தேவைப்பட்டு இருக்கிறது. ஆனால் அஸ்வின் அப்படி இல்லை என்று சொல்லி தன் கருத்தினை முரளிதரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.