இந்திய அணியில் இவங்க ரெண்டுபேரு கூட நான் பேட்டிங் பண்ணும் போது கஷ்டமே இருக்காது – மனம்திறந்த முரளி விஜய்

- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு நாடுகளின் ரசிகர்களின் பெரும் வரவேற்பினை பெற்று வரும் ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்க இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

murali

- Advertisement -

அதன் பிறகு தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் குறையாததால் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஐபிஎல் நடத்த எந்த ஒரு திட்டமும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆன பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்த கருத்தில் தற்போது இந்தியாவின் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதனால் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை காலவரையறை இன்றி ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை சிஎஸ்கே அணியின் துவக்க வீரர் முரளி விஜய் லைவ் ஆக பேசிய வீடியோ ஒன்றினை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

Ellyse

அதில் கிரிக்கெட் குறித்த சில கேள்விகளுக்கு பதிலளித்த முரளிவிஜய் தான் டின்னர் செல்ல வேண்டும் என்றால் யாருடன் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனை எலிஸ் பெர்ரியை தான் அழைப்பேன் என்று கூறியிருந்தார். மேலும் அவர் மிக அழகானவர் அவருடன் டின்னர் செல்ல விரும்புவதாகவும் அவர் கலகலப்பாக பேசினார். மேலும் ஆண் நண்பராக இருந்தால் ஷிகார் தவானுடன் டின்னர் செல்வேன். ஏனென்றால் அவர் கலகலப்பானவர் என்றும் முரளி விஜய் கூறினார்.

- Advertisement -

மேலும் கிரிக்கெட் குறித்த பல விடயங்களைப் பகிர்ந்து கொண்ட முரளி விஜய் சேவாக் உடன் துவக்க வீரராக களமிறங்குவது குறித்து விளையாடுவது குறித்து தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார். அதில் ஷேவாக் எதிர்புறம் இருந்தால் ரன்கள் தானாக வரும் என்றும், சேவாக் இருக்கும்போது நமக்கு கவலையே வேண்டாம் அவரே அடித்து நொறுக்குவார் என்றும் குறிப்பிட்டார். மேலும் தோனியுடன் விளையாடும் போது நாம் நம்முள் இருக்கும் பதட்டம் நீங்கி விடும்.

,murali vijay

ஏனென்றால் மைதானத்தின் மத்தியில் தோனி நிற்கும் பொழுது அவர் வீரர்களை சாந்தப்படுத்தி சரியான வழியில் அழைத்துச் செல்வார். அவருடன் விளையாடிய இங்கிலாந்து டெஸ்ட் போட்டி என்னால் மறக்க முடியாத ஒன்று. சேவாக் உடன் இருந்தால் அதிரடியும் தோனியுடன் இருந்தால் தெளிவான மனநிலையும் தானாக வரும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement