அவர் என்கிட்ட ஹிந்தில பேசுவார். நான் தமிழ்ல பேசுவேன். ரொம்ப தமாஷா இருக்கும் – முரளி விஜய் கலகல பேட்டி

Dhawan
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு நாடுகளின் ரசிகர்களின் பெரும் வரவேற்பினை பெற்று வரும் ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்க இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

murali

- Advertisement -

அதன் பிறகு தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் குறையாததால் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஐபிஎல் நடத்த எந்த ஒரு திட்டமும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆன பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்த கருத்தில் தற்போது இந்தியாவின் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதனால் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை காலவரையறை இன்றி ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை சிஎஸ்கே அணியின் துவக்க வீரர் முரளி விஜய் லைவ் ஆக பேசிய வீடியோ ஒன்றினை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

Ellyse

அதில் கிரிக்கெட் குறித்த சில கேள்விகளுக்கு பதிலளித்த முரளிவிஜய் தான் டின்னர் செல்ல வேண்டும் என்றால் யாருடன் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனை எலிஸ் பெர்ரியை தான் அழைப்பேன் என்று கூறியிருந்தார். மேலும் அவர் மிக அழகானவர் அவருடன் டின்னர் செல்ல விரும்புவதாகவும் அவர் கலகலப்பாக பேசினார். மேலும் ஆண் நண்பராக இருந்தால் ஷிகார் தவானுடன் டின்னர் செல்வேன். ஏனென்றால் அவர் கலகலப்பானவர் என்றும் முரளி விஜய் கூறினார்.

Vijay

மேலும் இந்திய அணியில் விளையாடி அனுபவங்கள் குறித்து பேசிய அவர்மேலும் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் முரளிவிஜய் சுவாரஸ்யமான நிகழ்வாக ஷிகர் தவானுடன் டின்னர் செல்ல எப்பொழுதும் விரும்புவதாக தெரிவித்தார். ஏனெனில் தவான் எப்போதும் ஒரு வேடிக்கை மனிதர் அவருடன் எந்த நேரத்தில் இருந்தாலும் கலகலப்பாக செல்லும். அவர் என்னிடம் ஹிந்தியில் உரையாடுவார் ஆனால் நான் அவரிடம் பதில் தமிழுக்கு உரையாடுவேன் அவருக்கு நான் என்ன கூறுகிறேன் என்று புரியாது அந்த நேரங்கள் மிக இனிமையாக இருக்கும் என்றும் முரளி விஜய் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement