இந்திய அணியை தொடர்ந்து தமிழக அணியிலும் விளையாட முடியாதாம். முரளி விஜய்க்கு ஏற்பட்ட சோகம் – விவரம் இதோ

Murali-Vijay
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரரும், தமிழக வீரருமான முரளிவிஜய் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பார்ம் அவுட் ஆன 35 வயதான முரளி விஜய் அணியில் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

,murali vijay

- Advertisement -

இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும் தொடர்ந்து தற்போது தமிழக அணிக்காக அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது சையத் அலி தொடருக்கான தமிழக அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் முரளி விஜய் தற்போது தமிழக அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

அதற்கு காரணம் யாதெனில் தொடக்க வீரரான முரளி விஜய் சையத் முஷ்டாக் அலி தொடரின் சில போட்டிகளில் விளையாடி வந்தாலும் தற்போது பயிற்சியின் போது அவருடைய கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக காயத்தின் தன்மை குறித்து சோதித்து பார்த்ததில் அவரால் இந்த தொடர் முழுவதும் விளையாட முடியாது என்று தெரியவந்துள்ளது.

Murali vijay

மேலும் அவர் விரைவில் கணுக்கால் காயத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் தமிழக அணியில் இருந்து தற்போது விலகி உள்ளார் அவருக்கு பதிலாக சித்தார்த் களமிறங்குவார் என்று தமிழக அணி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement