தோனி ஓய்வு குறித்த திட்டத்தை ஏற்கனவே பி.சி.சி.ஐ யிடம் தெரிவித்து விட்டார் – முனாப் பட்டேல் பகீர்

Munaf
- Advertisement -

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. ஐ.சி.சி யின் மூன்று வகையான கோப்பைகளை வென்ற இவர் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஓய்வு குறித்து தோனி இன்னும் இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

Dhoni

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து மட்டும் விலகுவதாக தோனி கூறியுள்ளார். அதனால் அடுத்த இரண்டு மாதத்திற்கு இந்திய ராணுவத்துடன் இணைந்து பயிற்சி பெற இருக்கிறார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முனாப் பட்டேல் தோனி குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : தோனி தனக்கென ஒரு தனி இடத்தை வைத்திருப்பார் அது குறித்து ஏற்கனவே அவர் பிசிசிஐ-யிடம் தெரிவித்து இருப்பார். அவர் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியும். யாரும் ஆலோசனை வழங்க தேவை இல்லை அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்து பிசிசிஐ-யிடம் நிச்சயமாக தனது முடிவை தெரிவித்திருப்பார்.

Dhoni

எனவே தோனியின் ஓய்வு குறித்து அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். மேலும் 1975ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணி செய்த சாதனைகளை தோனி 2007 முதல் 2015 ஆம் ஆண்டுகளிலேயே செய்து விட்டார். அவர் அனைத்து கோப்பைகளையும் இந்தியாவிற்கு பெற்று தந்து விட்டார். அவர் மாதிரியான ஒரு வீரரை இந்திய அணியில் இருந்து எளிதில் தவிர்க்க முடியாது என்று முனாப் பட்டேல் தெரிவித்தார்.

Advertisement