கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும், 2023 உ.கோ ரோஹித் தலைமையில் இந்தியா ஜெயிக்கும் – மும்பை இந்தியன்ஸ் மாஸ் கணிப்பு

Rohit Sharma 2
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் 2011 போல சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா சொந்த ரசிகர்கள் ஆதரவுடன் கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு தயாராகும் வகையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடைபெறும் ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பலத்தை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த நிலைமையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவுக்கு அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் கடந்த 41 நாட்களாக பயணித்து ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவை நெருங்கியது. அதன் இறுதிக்கட்டமாக விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டரை நிலவில் தரையிருக்கும் முக்கியமான நிகழ்வு மாலை 6:00 மணியளவில் நடைபெற்றது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் கணிப்பு:
குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரஷ்யா அனுப்பிய விண்கலம் கடைசி நேரத்தில் நிலவில் மோதி நொறுங்கியதால் இந்தியா அனுப்பிய சந்திராயன் 3 வெற்றி காணுமா என்ற எதிர்பார்ப்பு மொத்த உலக நாடுகளிடம் ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் மாலை 6.04 மணியளவில் சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கொஞ்சம் கொஞ்சமாக சமூகமாக நிலவில் களமிறங்கியது இஸ்ரோ விஞ்ஞானிகளையும் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

ஏனெனில் இதன் வாயிலாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வெளிநாடுகளை மிஞ்சிய இந்தியா இந்த உலகில் யாருமே காணாத நிலவின் தென் துருவப் பகுதியில் கால் பதித்த முதல் நாடு என்ற மாபெரும் சரித்திரம் படைத்தது. அந்த வரலாற்று நிகழ்வை அயர்லாந்தில் டி20 தொடரில் விளையாடிய பும்ரா தலைமையிலான இந்திய அணியினர் முதல் தோனியின் மகள் ஜீவா வரை அனைவரும் கொண்டாடி தீர்த்தனர். அந்த நிலையில் இந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் நிர்வாகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு இந்திய ரசிகர்களை திரும்பி பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.

- Advertisement -

அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு இதே போல இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக தோல்வியில் முடிந்தது. அதே போலவே இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பையில் ஆரம்பம் முதலே அசத்தி வந்த விராட் கோலி தலைமையிலான இந்தியா மான்செஸ்டரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை கடைசி நேரத்தில் கோட்டை விட்டது.

இருப்பினும் சந்திரயான் 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் இன்னும் நிலவை சுற்றி தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரன் 3 விக்ரம் லேண்டருக்கு தேவையான உதவிகளை செய்து வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவதற்கு உதவியது. அந்த வகையில் சந்திராயன் 2 திட்டத்தின் தலைவராக இருந்த கே.சிவன் 2019இல் சந்தித்த தோல்வியால் மனமுடைந்த புகைப்படத்தையும் 5 சதங்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தும் 2019 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த ரோகித் சர்மாவின் புகைப்படத்தையும் இணைத்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க:வீடியோ : சந்திராயன் 3 வெற்றியால் துள்ளி குதித்த தோனியின் மகள் – ரசிகர்களாக மாறி கொண்டாடிய இந்திய வீரர்கள்

மேலும் தற்போது சந்திராயன் 3 வெற்றி கண்டதை அறிவித்த புதிய இஸ்ரோ தலைவர் சோமநாத் அவர்களின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ள மும்பை நிர்வாகம் அடுத்ததாக கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியா வரும் என்ற வகையில் 2023 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் வென்று சரித்திரம் படைக்கும் என்ற தன்னம்பிக்கையுடன் காத்திருப்பதாக மறைமுகமாக கணித்துள்ளது. ஒருவேளை மும்பை கூறுவது போல சந்திரன் 3 போல உலக கோப்பையையும் இந்தியா இந்த வருடம் வென்றால் அது சிறப்பானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement