ரன் குவிக்க வேண்டும் என்ற பசியில் உள்ளேன்…பெங்களூர்க்கு அணிக்கு சவால் விடும் மும்பை அதிரடி வீரர் – யார் தெரியுமா ?

kieron1

இந்த ஐபிஎல் சீசனில் மூன்று போட்டிகளில் விளையாடிய ரோகித்சர்மா தலைமையிலான மும்பை அணி ஒருபோட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலை இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

pollard

இன்றைய போட்டி 8மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிக்கப்போவதாக பொல்லார்டு கூறியுள்ளார்.இதுகுறித்து பேசிய பொல்லார்டு ‘‘நான் எப்போதும் சிறப்பாக விளையாடிட வேண்டுமென்று நினைப்பவன். சிறந்த அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொண்டு விளையாடுவேன்.

- Advertisement -

ஒரு சிறந்த வீரனாக எதிரணியை கணித்து விளையாட கற்றுக் கொண்டு கடுமையான பயிற்சி எடுத்து களத்தில் நின்று எதிரணியை வீழ்த்த வேண்டும். எனவே பெங்களூரு அணிக்கான போட்டி எனக்கும் அணிக்கும் வெற்றிகரமாக இருக்கும் என நம்புகின்றேன்.

kieron

ஏற்கனவே மூன்று போட்டிகளில் தோற்ற மும்பை அணி இன்றைய போட்டியிலும் தோற்றால் இந்த வருட ஐபிஎல் சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிடும்.

- Advertisement -
Advertisement