ஐபிஎல் 2022 மெகா ஏலம் : மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்த வீரர்கள் யார்? – முழு லிஸ்ட் இதோ

MI
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் எல்லாம் மெகா அளவில் நடைபெற்று முடிந்துள்ளது. பெங்களூருவில் கோலகலமாக கடந்த 2 நாட்களாக நடந்து வந்த இந்த ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கு பெற்றார்கள். இருப்பினும் அதில் தங்களுக்கு தேவையான தரமான வீரர்களை வாங்க அனைத்து 10 அணிகளும் கடும் போட்டி போட்டு வாங்கின.

Ganguly-ipl
IPL MI

இதில் 590 வீரர்கள் பங்கேற்ற போதிலும் இறுதிதில் 204 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களை வாங்குவதற்கு அனைத்து அணிகளும் சேர்த்து 551 கோடிகள் செலவிட்டு உள்ளன.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ்:
இந்த மெகா ஏலத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக வீரர்களை வாங்க துவங்கியது. குறிப்பாக இந்திய இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனை 15.25 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய அந்த அணி நிர்வாகம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் நேரடி ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன 2வது இந்திய வீரர் என்ற சாதனையையும் இஷன் கிஷன் படைத்துள்ளார்.

Ishan

அதேபோல் இதுவரை வெறும் ஒரு ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடி அதில் ஒரு 1 ரன் மட்டுமே எடுத்துள்ள சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட்டை சற்றும் யோசிக்காமல் 8.25 என்ற மிகப்பெரிய தொகைக்கு மும்பை நிர்வாகம் வாங்கியது. சமீபகாலமாகவே உலகம் முழுவதிலும் நடைபெறும் டி20 தொடரில் இவர் அதிரடியாக செயல்பட்டு வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

மேலும் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர், டைமல் மில்ஸ், ஆஸ்திரேலியாவின் டேனியல் டிம்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களையும் வாங்க தவறாத அந்த அணி நிர்வாகம் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இளம் வீரர் தேவால்டு ப்ரேவிஸையும் கடும் போட்டி போட்டு வாங்கியது. அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் முருகன் அஷ்வினையும் அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Tim-David

இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக தங்களுக்கு 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா (16 கோடி), நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூரியகுமார் யாதவ் (8 கோடி), கிரண் பொல்லார்ட் (6 கோடி) ஆகிய 4 முக்கியமான வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. மொத்தம் அனுமதிக்கப்பட்ட 90 கோடிகளில் இவர்களுக்கு செலவிட்ட தொகை போக மீதி 48 கோடிகளுடன் இந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. இறுதியில் 89.90 கோடிகளை செலவு செய்துள்ள அந்த அணி நிர்வாகம் தங்களுக்கு தேவையான 25 வீரர்களையும் வாங்கி தங்கள் அணியை முழுமை படுத்தியுள்ளது. இதில் 17 இந்திய வீரர்களும் 8 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள்.

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான மும்பை இந்தியஸ் அணி இதோ:

ரோஹித் சர்மா (கேப்டன் – 16 கோடி), ஜஸ்பிரிட் பும்ரா (12 கோடி), சூரியகுமார் யாதவ் (8 கோடி), கிரன் பொல்லார்ட் (6 கோடி), இஷான் கிஷான் (15.25 கோடி), டிம் டேவிட் (8.25 கோடி), ஜோப்ரா ஆர்ச்சர் (8 கோடி), தேவால்ட் ப்ரேவிஸ் (3 கோடி), டேனியல் சம்ஸ் (2.6 கோடி), திலக் வர்மா (1.7 கோடி), முருகன் அஷ்வின் (1.6 கோடி), டைமல் மில்ஸ் (1.5 கோடி), ஜெயதேவ் உனட்கட் (1.3 கோடி), ரிலே மெரிடித் (1 கோடி)

mumbai

பாபின் ஆலன் (75 லட்சம்) , மயங் மார்கண்டே (65 லட்சம்), சஞ்சய் யாதவ் (50 லட்சம்), அர்ஜுன் டெண்டுல்கர் (30 லட்சம்), பசில் தம்பி (30 லட்சம்) அர்ஷத் கான் (20 லட்சம்), அன்மோல்ப்ரீத் சிங் (20 லட்சம்), ராமந்தீப் சிங் (20 லட்சம்), ராகுல் புட்தி (20 லட்சம்), ஹ்ரித்திக் ஷாக்கீன் (20 லட்சம்), ஆர்யன் ஜுயல் (20 லட்சம்)

Advertisement