ஐபிஎல் 2022 : இந்த ஆண்டிற்கான மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல் முழு அணி இதுதான் – உத்தேச ப்ளேயிங் 11 இதோ

MI
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் பெங்களூருவில் 2 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பங்கேற்ற 590 வீரர்களில் இருந்து இறுதியாக 204 வீரர்கள் மட்டுமே 551 கோடி ரூபாய் செலவில் அனைத்து 10 அணிகளால் வாங்கப்பட்டுள்ளார்கள். இந்த ஐ.பி.எல் தொடர் முழுவதுமே கொரோனா அச்சம் காரணமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே நடைபெறவுள்ளன.

mi

- Advertisement -

இந்த ஏலத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக இந்திய இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிசான் 15.25 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. அதுமட்டுமல்லாமல் யாரும் எதிர்பாராத வண்ணம் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் டிம் டேவிட்டை 8.20 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்த அந்த அணி நிர்வாகம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

மும்பை இந்தியன்ஸ்:
முன்னதாக இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், கிரண் பொல்லார்ட் ஆகிய 4 முக்கிய வீரர்களை அந்த அணி ஏற்கனவே தக்க வைத்திருந்தது. அதைத்தொடர்ந்து தங்களுக்கு தேவையான எஞ்சிய 21 வீரர்களை இந்த ஏலத்தின் வாயிலாக மும்பை இந்தியன்ஸ் தேர்வு செய்துள்ளது.

MI-Auction

மொத்தம் அனுமதிக்கப்பட்ட 90 கோடிகளில் 25 வீரர்களை வாங்குவதற்கு அந்த அணி நிர்வாகம் 89.90 கோடிகளை செலவு செய்துள்ளது. இந்த 25 வீரர்களில் 17 இந்தியர்களும் 8 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். ஏலத்தின் முடிவில் அந்த அணியிடம் 10 லட்சம் மீதிதொகை உள்ளது.

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் முழு அணி இதோ:

ரோகித் சர்மா (கேப்டன் – 16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கிரண் பொல்லார்ட் (6 கோடி), இஷான் கிஷான் (15.25 கோடி), டிம் டேவிட் (8.25 கோடி), ஜோபிரா ஆர்ச்சர் (8 கோடி), தேவால்டு ப்ரேவிஸ் (3 கோடி), டேனியல் சம்ஸ் (2.6 கோடி), திலக் வர்மா (1.7 கோடி), முருகன் அஷ்வின் (1.6 கோடி), ட்யமல் மில்ஸ் (1.5 கோடி), ஜெயதேவ் உனட்கட் (1.3 கோடி), ரிலே மெரிடித் ( 1 கோடி), பாபின் ஆலன் (75 லட்சம்), மயங் மார்கண்டே (65 லட்சம்), சஞ்சய் யாதவ் (50 லட்சம்), அர்ஜுன் டெண்டுல்கர் (30 லட்சம்), பசில் தம்பி (30 லட்சம்), அர்ஷத் கான் (20 லட்சம்), அன்மோல்ப்ரீட் சிங் (20 லட்சம்), ராமந்தீப் சிங் ( 20 லட்சம்), ராகுல் பௌதீ (20 லட்சம்), ஹ்ரித்திக் ஷாக்கீன் (20 லட்சம்), ஆர்யன் ஜுயல் (20 லட்சம்)

mumbai

இந்த மெகா ஏலத்தின் முடிவில் மொத்த அணியில் இருந்து களத்தில் விளையாட சரியாக பொருந்த கூடிய திறமையான 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு அணி நிர்வாகத்துக்கு உள்ளது. அந்த வகையில்

ஐபிஎல் 2022 தொடருக்கான உத்தேச 11 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிசான் (கீப்பர்), சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட்*, கிரண் பொல்லார்ட்*, சஞ்சய் யாதவ், டானியல் சம்ஸ்*, முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ்/ரிலே மெரிடித்*.

Advertisement