IPL 2023 : சூர்யகுமாரின் முரட்டு அடியால் 2 ஆல் டைம் ஐபிஎல் சாதனைகளை உடைத்த மும்பை – 2 வெறித்தனமான வரலாற்று சாதனை

- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 9ஆம் தேதிய இரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 54வது லீக் போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் இருந்து நேராக 3வது இடத்திற்கு முன்னேறி மாஸ் காட்டியுள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 220 ரன்களை அடிப்பதற்கான நல்ல துவக்கத்தை பெற்றும் 20 ஓவரில் 199/6 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளேஸிஸ் 65 (41) ரன்களும் கிளன் மேக்ஸ்வெல் 68 (33) ரன்களும் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பேரன்ஃடாப் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

SKY and Nehal

- Advertisement -

அதை தொடர்ந்து 200 ரன்களை துரத்திய மும்பைக்கு பவர் பிளே ஓவர்களில் சரவெடியாக விளையாடிய இசான் கிசான் 51 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 42 (31) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் அவருடன் தடுமாற்றமாக செயல்பட்ட ரோஹித் சர்மா 7 (8) ரன்களில் அவுட்டாகி சென்றாலும் அடுத்து வந்த நம்பிக்கை நாயகன் சூரியக்குமார் யாதவ் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே தனது பாணியில் சுமாராக பந்து வீசிய பெங்களூரு பவுலர்களை கற்பனை செய்ய முடியாத வித்யாசமான ஷாட்களை பயன்படுத்தி மைதானத்தின் 360 டிகிரியிலும் தாறுமாறாக அடித்தார்.

வெறித்தனமான சாதனை:
குறிப்பாக எப்படி போட்டாலும் அடிக்கிறார் என்று வியக்கும் அளவுக்கு பெங்களூரு பவுலர்களுக்கு கருணை காட்டாமல் முரட்டுத்தனமாக அடித்த அவர் 3வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 7 பவுண்டரி 6 சிக்ஸருடன் 83 (35) ரன்களை 237.14 என்ற ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். இறுதியில் அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு அசத்திய நேஹல் வதேரா 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 52* (34) ரன்கள் எடுத்ததால் 16.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய மும்பை பெங்களூருவுக்கு எதிராக முதல் முறையாக 200 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைத்தது.

இதற்கு முன் பெங்களூருவுக்கு எதிராக அந்த அணி 180 ரன்களை கூட வெற்றிகரமாக துரத்தியதில்லை. அதை விட ராஜஸ்தானுக்கு எதிராக 215 ரன்களை வெற்றிகரமாக துரத்திய மும்பை பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டியிலும் அதே 215 ரன்கள் வெற்றிகரமாக சேசிங் செய்தது. அந்த நிலைமையில் இந்த போட்டியிலும் 200 ரன்களை வெற்றிகரமாக எட்டிய மும்பை ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 3 போட்டிகளில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற அதிரடியான சாதனையை படைத்துள்ளது.

- Advertisement -

இதற்கு முன் வேறு எந்த அணியும் எந்த சீசனிலும் தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றிகரமாக 200+ இலக்கை சேசிங் செய்வதில்லை. சொல்லப்போனால் 2014இல் பஞ்சாப் மற்றும் 2018இல் சென்னை ஆகிய அணிகள் 2 முறை 200+ இலக்கை வெற்றிகரமான சேசிங் செய்தன. ஆனால் மும்பையை போல் அதை தொடர்ச்சியாக அடுத்தடுத்த 2 போட்டிகளில் அந்த அணிகள் சேசிங் செய்யவில்லை.

Rohit Sharma MI Ishan Kishan

மொத்தத்தில் இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக முறை 200+ இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற சாதனையும் மும்பை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. மும்பை : 3* (2023)
2. பஞ்சாப் : 2 (2014)
3. சென்னை : 2 (2018)

இதையும் படிங்க:RCB vs MI : அவரு அடிக்க ஆரம்பிச்சா தடுக்குறது ரொம்ப கஷ்டங்க. தோல்வி குறித்து – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

அதை விட சூரியகுமாரின் முரட்டு அடியால் 200 ரன்களை 16.3 ஓவரிலேயே 21 பந்துகள் மீதம் வைத்து எட்டிய மும்பை ஐபிஎல் வரலாற்றில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை மிகவும் குறைந்த பந்துகளில் அதிவேகமாக சேசிங் செய்த அணி என்ற டெல்லியின் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. மும்பை : 200 இலக்கு – 21 பந்துகள், பெங்களூருவுக்கு எதிராக, 2023*
2. டெல்லி : 205 இலக்கு – 16 பந்துகள், குஜராத் லயன்ஸ்க்கு எதிராக, 2017
3. பஞ்சாப் : 201 இலக்கு – 10 பந்துகள், கொல்கத்தாவுக்கு எதிராக, 2010

Advertisement