
ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் காலிறுதி சுற்று நிறைவு பெற்றுள்ளது. அதில் கொல்கத்தாவில் நடைபெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பை மற்றும் ஹரியானா அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் 315 ரன்கள் குவித்தது.
முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 94-6 என தடுமாறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக சம்ஸ் முலானி 91, டானுஷ் கோட்டியான் 97 ரன்கள் எடுத்துக் காப்பாற்றினார்கள். ஹரியானாவுக்கு அதிகபட்சமாக சுமித் குமார் 3, அன்சுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக களமிறங்கிய சரியானவுக்கு கேப்டன் அங்கித் குமார் சதத்தை அடித்து 136 ரன்கள் குவித்தார்.
அதனால் 257-4 என ஹரியானா வலுவான நிலையில் இருந்த போது பந்து வீச்சில் மேஜிக் செய்த சர்துள் தாக்கூர் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதன் காரணமாக ஹரியானாவை 301க்கு சுருட்டிய மும்பை முன்னிலை பெற்று அசத்தியது. பின்னர் களமிறங்கிய மும்பை மிகவும் சிறப்பாக விளையாடி 339 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் ரகானே சதத்தை அடித்து 108, சூரியகுமார் யாதவ் 70, சிவம் துபே 48 ரன்கள் குவித்து அசத்தினார்கள். ஹரியானாவுக்கு அதிகபட்சமாக அனுஜ் தாக்ரல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 354 ரன்களை துரத்திய ஹரியானாவை 201 ரன்களுக்கு சுருட்டிய மும்பை 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதிகபட்சமாக லக்சய் தலால் 64, சுமித் குமார் 62 ரன்கள் எடுத்தார்கள்.
மும்பைக்கு அதிகபட்சமாக ரோய்ஸ்டன் தியாஸ் 5, சர்துள் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள். இந்த வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தாகூர் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆஸ்திரேலியாவில் 2021 காபா, இங்கிலாந்தில் லண்டல் ஓவல் டெஸ்ட் போட்டியில் ஆல் ரவுண்டராக அபாரமாக விளையாடிய அவர் இந்தியாவின் மறக்க முடியாத வெற்றிகளில் பங்காற்றினார்.
இதையும் படிங்க: என்னை முந்தி புதிய கிங்காக சாதித்துள்ள ரோஹித்துக்கு வாழ்த்துக்கள்.. கோலி இப்போவும் பெஸ்ட்.. கிறிஸ் கெயில்
இருப்பினும் சமீபத்திய வருடங்களில் சுமாராக விளையாடியதால் அவரை இந்திய அணி கழற்றி விட்டுள்ளது. ஆனால் தற்போதைய ரஞ்சிக் கோப்பையில் சுமார் 400 ரன்கள் அடித்துள்ள அவர் 30+ விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதனால் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று தாக்கூர் செயல்பாடுகளால் கேட்பது குறிப்பிடத்தக்கது.