இந்திய அணியை எதிர்த்து விளையாடப்போகும் மும்பையில் பிறந்த நியூசிலாந்து வீரர் – யார் தெரியுமா ?

INDvsNZ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் ஜூன் மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. நீண்டநாட்களாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருப்பதால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களின் அனைவரது கவனத்தையும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே நாள்தோறும் இந்த இறுதிப் போட்டி குறித்து சுவாரசியமான செய்திகள் வெளியாகி வருகின்றன.

INDvsNZ

அந்த வகையில் தற்போது இந்த இறுதிப் போட்டி குறித்த சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் விதமாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அணிக்கு எதிராக இந்திய நாட்டில் பிறந்த வீரர் ஒருவர் தற்போது விளையாட இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நியூசிலாந்து அணியை சேர்ந்த 32 வயதுடைய வீரரான அஜாஸ் படேல் மும்பையில் 1988ஆம் ஆண்டில் பிறந்தார்.

- Advertisement -

பின்னர் இங்கிருந்து நியூஸிலாந்துக்கு குடிபெயர்ந்த அவர் தற்போது நியூசிலாந்து நாட்டின் குடிமகனாக அங்கு கிரிக்கெட் விளையாடி வருகிறார். 2018 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு அறிமுகமான அஜாஸ் படேல் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 2 டி20 போட்டிகளில் அவர் நியூசிலாந்து அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajaz

இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம் பிடித்துள்ள அவர் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் பிறந்த நாடான இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடுவது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நியூசிலாந்தில் குடியேறிய நான் இங்கு எனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கி விளையாடி வருகிறேன்.

- Advertisement -

இப்போது நான் என்னுடைய பிறந்த நாடான இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணிக்காக விளையாட உள்ளது அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார். மும்பையில் பிறந்த வீரர் ஒருவர் நியூசிலாந்து அணிக்காக தற்போது இந்திய அணியை எதிர்த்து விளையாட இருப்பது ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி இணையத்திலும் இச்செய்தி வைரல் ஆகிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement