கவாஸ்கர் கூறியதை வரவேற்கிறோம். இருப்பினும் இந்த ஒரு விஷயத்தை அவர் புரிந்துகொள்ள வேண்டும் – எம்.எஸ்.கே பிரசாத் அதிரடி

Prasad

இந்திய அணியின் கேப்டனாக கோலியை மீண்டும் நியமித்ததற்கு எதிராக சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தற்போது உள்ள இந்திய அணியின் தேர்வுக்குழு நொண்டி வாத்தினைபோல் செயல்பட்டு வருகின்றனர். எப்படி அவர்கள் விராட் கோலியை மீண்டும் கேப்டனாக தேர்வு செய்தார்கள் ? என்று புரியவில்லை.

Kohli

உலக கோப்பை தொடரில் சரியாக விளையாடாத ஜாதவ் மற்றும் கார்த்திக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கிவிட்டனர். அதைப்போலவே சரியாக செயல்படாத கேப்டன் விராட் கோலியின் கேப்டன்ஷிப்பை அவர்கள் பறித்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் கேப்டன் பதவியை ஆலோசிக்காமல் கோலிக்கு கண்மூடித்தனமாக வழங்கியுள்ளனர். இது தேர்வுக்குழுவினர் விருப்பமா அல்லது விராத் கோலியின் தனிப்பட்ட விருப்பமா ? என்ற கேள்வியும் எனக்கு எழுந்து உள்ளது.

- Advertisement -

மேலும் இந்திய தேர்வுக்குழுவின் கடைசி அணி தெரிவு இதுவாக இருக்கும் ஏனென்றால் விரைவில் இந்திய அணிக்கு புதிய தேர்வுக் குழு அமைக்கப்பட வேண்டும். இனிமேல் அமைக்கும் குழுவானது அணிக்கு ஏற்றவாறு வீரர்களை தேர்வு செய்து விளையாட வைக்கும் என்று நம்புகிறேன் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

gavaskar

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் கூறியதாவது : அணி தேர்வுக் குழுவில் உள்ள அனைத்து தேர்வாளர்களுமே அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளனர். சர்வதேச போட்டிகளை தவிர்த்து நாங்கள் 477 விளையாடி உள்ளோம். இதைவிட பெரிய அனுபவம் தேவையில்லை இதுவே போதும் என நினைக்கிறேன்.

- Advertisement -

Gavaskar

இங்கிலாந்து அணியின் சேர்மன் ஸ்மித் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அதேபோல ஆஸ்திரேலிய அணியின் தலைமை தேர்வாளர் ஹோன்ஸ் ஏழு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே பங்கேற்று உள்ளார். ஆனால் 128 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 224 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மார்க் வாக் அவருக்கு கீழ் தான் பணிபுரிகிறார். எனவே நான் கவாஸ்கர் அவர்கள் தெரிவித்த கருத்துக்கு அவரின் உணர்வை மதிக்கிறோம் மேலும் அவரது கருத்துகளை வரவேற்கிறோம். அதே சமயம் புண்படுத்தும்படி வரும் கருத்துக்கள் எங்கள் குழுவை பலப்படுத்துமே தவிர வேறு ஒன்றும் நடக்காது எங்கள் ஒற்றுமை அதிகரிக்கும் என்று பிரசாத் கூறினார்.

Advertisement