அந்த 2 சின்னப்பசங்களை விட தோனி டி20 உலககோப்பைக்கு ரொம்ப முக்கியம் – தேர்வுக்குழு தலைவர் கருத்து

Prasad
- Advertisement -

மகேந்திர சிங் தோனி உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணிக்காக ஆடி கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு மேலாகிறது. தற்காலிக ஓய்வில் இருப்பதாக அறிவித்த அவரது பிசிசிஐ ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்நிலையில் மீண்டும் எப்படியாவது இந்திய அணிக்காக ஆடி விட வேண்டுமென்று ஐபிஎல் தொடருக்காக தயாராகிக் கொண்டிருந்தார். ஐ.பி.எல் தொடரின் மூலம் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பிடிக்கலாம் என்று தோனி நினைத்திருந்தார்.

Dhoni

- Advertisement -

அந்த நேரத்தில்தான் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடியது. இதன்காரணமாக ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த பத்து மாத காலத்திற்குள் ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய தொடர்களுக்கான விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்பி விட்டனர்.

தோனியின் இடத்தை நிரப்ப முடியவில்லை என்றாலும் கீப்பர்களாக இருவரும் மாறி தங்களது இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அணிக்கு தோனி இனி தேவையில்லை என்ற ஒரு பேச்சு நிலவி வருகிறது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் பேசியுள்ளார்.

dhoni with pant

இதுகுறித்து அவர் கூறுகையில்… டி20 உலக கோப்பை தொடர் நடக்குமா என்பது தற்போது வரை நிச்சயமாகத் தெரியவில்லை .அவ்வாறு நடக்கும் பட்சத்தில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தோனியை கண்டிப்பாக எடுக்க வேண்டும். மற்றபடி இரு தரப்பு, முத்தரப்பு போன்ற தொடர்களுக்கு கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளனர்.

samson

மேலும் சஞ்சு சாம்சன் அவரையும் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஆஷிஷ் நெஹராவும் இதே கருத்தை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் வருங்காலத்தில் தோனியின் இடத்தினை நிரப்ப பண்ட் மற்றும் சாம்சன் ஆகியோர் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement