தோனி இருக்கும்போது கோலியை நாங்கள் கேப்டன் ஆக்கியதற்கு இதுவே காரணம் – ரகசியத்தை ஓபன் செய்த எம்.எஸ்.கே பிரசாத்

Prasad
- Advertisement -

எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான இந்திய தேர்வுக் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து இந்திய முன்னாள் வீரர் சுனில் ஜோஷி தேர்வுக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . இந்த தேர்வுக்குழுவே தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்ய உள்ளது குறிப்பித்தக்கது.

Prasad

இந்நிலையில் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவரான எம்எஸ்கே பிரசாத் தனது பதவிக்காலத்தில் இந்திய அணியில் நடந்த ஒரு முக்கிய மாற்றம் குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். தோனி கேப்டன் தலைமையில் இருந்த போது இந்திய அணி அபாரமாக விளையாடி சிறப்பான வெற்றிகளை பெற்றது.

- Advertisement -

அதன்பிறகு கேப்டன்சி கோலி கைக்கு மாற்றப்பட்டது. கோலியின் தலைமையில் இந்திய சிறப்பான வெற்றிகளை பெற்று கொடுத்தாலும் சில மோசமான வீரர்களின் தேர்வுகளால் முக்கிய ஐ.சி.சி தொடர்களை இழந்துள்ளது.

Dhoni-kohli

இந்நிலையில் தனது பதவி காலத்தில் எப்படி கேப்டன்சி மாற்றம் குறித்து இப்போது பேசி உள்ளார் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத். அது குறித்து அவர் கூறியதாவது : தோனி தலைமையில் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று வகையான கோப்பைகளையும் வென்று வரலாறு படைத்தது.

- Advertisement -

ஆனால் அவர் கேப்டன்சியில் இருந்து விலகியதும் அவரது இடத்தை பூர்த்தி செய்ய கோலியை எனது தலைமையில் இருந்த குழு மூலம் ஒரு முடிவுக்கு வந்தோம். அவரை தேர்வு செய்து தோனியிடம் இருந்து கேப்டன் பொறுப்பு அருமையாக கோலி கைய்க்கு மாற்றப்பட்டது. இந்த கேப்டன்சி மாற்றம் நடந்த முறை அருமையானது.

Kohli

அந்த பெருமை என்னையும் என்னுடன் இருந்து உறுப்பினர்களில் சேரும் என்று நான் கருதுகிறேன் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது என்று முடிவெடுத்த பின்னர் அவரது இடத்தை நிரப்ப தகுதியான நபர் யார் என்று பார்த்தோம். அதனால் பிரச்னை இருக்க கூடாது என்று நினைத்து பேட்டிங்கில் சிறந்து விளங்கிய கோலிக்கு கேப்டன் பதவியை வழங்கினோம். மேலும் கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement