ரிஷப் பண்ட் மற்றும் சாம்சனுக்கு போட்டியாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இவர் இருப்பார் – எம்.எஸ்.கே பிரசாத் பேட்டி

Prasad
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்நிலையில் அந்த அணி குறித்து அனைவரும் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சீனியர் வீரர்கள் விட பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

mi

- Advertisement -

இந்த சீசனில் ஏகப்பட்ட இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வகையில் படிக்கல், ராகுல் திவாதியா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சுப்மன் கில், நடராஜன், வருன் சக்ரவர்த்தி, சிவம் மாவி, நாகர்கோடி போன்ற பல வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் யாரும் நம்ப முடியாத வகையில் தனது அதிரடியான ஆட்டத்தை இந்த தொடர் முழுவதும் வெளிப்படுத்தினார். முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் மீதமுள்ள போட்டிகளை சரியாக பயன்படுத்தி அவருக்கு இந்த சீசனில் மட்டும் 30 சிக்சர்களுடன் 516 ரன்களை குவித்து அசத்தினார். மேலும் அதிக சிக்சர் அடித்த வீரர் விருதை இந்த ஆண்டு அவரை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் கடும் போட்டிக்கு இடையே வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். அந்த வகையில் இனி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மனுக்கான போட்டியில் இஷான் கிஷனும் இருப்பார் என முன்னாள் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் போட்டியில் இஷான் கிஷன் ஆட்டத்தை பார்க்க மிகவும் சிறப்பாக இருந்தது.

Ishan-kishan

நான்காவது இடத்திலும் சரி, தொடக்க இடத்திலும் சரி அவர் சிறப்பாக அந்த இடத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி விளையாடி வருகிறார். இதன் காரணமாக அவரது திறமை அதிகரித்துள்ளது. சரியான நேரம் வரும்போது இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அவர் மற்றவர்களுடன் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. மேலும் அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்பதால் இந்திய அணிக்கு ஒரு கூடுதல் வரவாராக அவர் இருப்பார் என பிரசாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement