உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின்னர் தோனி விளையாடாததற்கு இதுவே காரணம் – எம்.எஸ்.கே பிரசாத் பேட்டி

Prasad
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின்னர் இந்திய அணியில் விளையாடவில்லை. இதன் காரணமாக இந்திய அணி வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்தும் தோனியின் பெயர் நீக்கப்பட்டதால் தோனியின் எதிர் காலம் முடிந்துவிட்டது என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Dhoni

- Advertisement -

ஆனால் தோனி இது குறித்த தனது ஓய்வு அறிவிப்பை இதுவரை அறிவிக்கவில்லை. மேலும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடி மீண்டும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவரான எம்எஸ்கே பிரசாத் தோனியின் எதிர்காலம் மற்றும் அவரின் ஓய்வு குறித்த முக்கிய தகவல்களை மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : நான் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கிறேன் உலக கோப்பை முடிந்தவுடன் நாங்கள் தோனியுடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர் கிரிக்கெட்டில் இருந்து தான் தற்காலிகமாக சிறிது காலம் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து தான் ரிஷப் பண்ட்டை அணியில் சேர்த்தோம். இப்போது வரை அவரே இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இது குறித்து மேலும் தொடர்ந்த அவர் : தற்போது ராகுல் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ராகுல் விக்கெட் கீப்பர் பணியை சிறப்பாக செய்கிறார். அதனை நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரின் போதும் அவர் நிரூபித்துவிட்டார்.

- Advertisement -

ஐபிஎல் தொடர் நடந்திருந்தால் தோனியின் பழைய ஆட்டத்தை காண வாய்ப்பு இருந்திருக்கும் என்று இப்போது அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பதால் அவரின் நிலை அவருக்கு மட்டுமே தெரியும் என்று எம்எஸ்கே பிரசாத் வருத்தத்துடன் கூறியுள்ளார். அவர் தற்போது தோனி குறித்து தனது வருத்தமான தகவலை வெளியிட்டுள்ளார்.

dhoni

அதுமட்டுமின்றி தற்போது இந்திய புதிய புதிய தேர்வுக்குழு தோனியை விட்டு கடந்து சென்றது என்றே கூற வேண்டும். ஏனெனில் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலிலும் டோனியின் பெயர் நீக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தோனி முக்கிய வீரராகவும், பெரிய வீரராக இருந்தாலும் அவரின் ஆட்டத்திறன் இப்பொழுது அணிக்கு அவசியம். எனவே ஐபிஎல் தொடரை பொறுத்தே அவர் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Ravi

தோனி மிகப்பெரிய வீரர் என்பதால் அவருடைய ஓய்வு குறித்த கருத்து அவரின் கைகளிலேயே உள்ளது என்று ஏற்கனவே பி.சி.சி.ஐ தரப்பில் செய்திகள் வெளியானதால் தோனி விரைவில் ஓய்வினை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே தோனியின் நண்பர்கள் வட்டாரத்தில் வெளிவந்த தகவலில் தோனி ஓய்வு முடிவை எடுத்து விட்டதாகவும் அவர் தனது பிரியாவிடை போட்டிக்காக காத்து இருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement