விராட் கோலி, ரவி சாஸ்திரி கூட டீம் செலக்ஷன்ல சண்ட வந்தா இதுதான் நடக்கும் – எம்.எஸ்.கே பிரசாத் வெளிப்படை

Prasad
- Advertisement -

2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை இந்திய கிரிக்கெட் அணயின் தேர்வுக் குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத் செயல்பட்டு வந்தார். இவருடைய பதவிக்காலத்தின்போது பல விமர்ச்சனங்கள் இவர் மேல் வைக்கப்பட்டது. குறிப்பாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்கு பிறகு யுவராஜ் சிங்கை இந்திய அணிக்கு தேர்வு செய்யாமல் விட்டது, 2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக 3D ப்ளேயரான விஜய் சங்கரை இந்திய அணியில் சேர்த்தது போன்ற முடிவுகளால், அதிகமான விமர்ச்சனத்திற்கு அவர் உள்ளானார்.

Prasad

- Advertisement -

இந்திய அணி வீரர்களின் தேர்வு குறித்து இவருக்கும், விராட் கோஹ்லி மற்றும் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ஆகியோருக்கும் இடையில் பல முறை கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தாலும், அது வெளியே தெரியாததால் பெரிய பிரச்சனையாக உருவெடுக்காமல் சென்றுவிட்டது. இந்நிலையில் பிரசாத்திடம் பேட்டியெடுத்த ஒரு தனியார் இணையதளம் அவரிடம், விராட் கோஹ்லி மற்றும் ரவி சாஸ்திரி ஆகிய இருபெரும் ஆளுமைகளுக்கு எதிராக உங்களால் எதுவும் செய்ய முடியாமல் போனது என்ற கருத்து நிலவுகிறதே, இதைப் பற்றி உங்களுடைய பதில் என்ன? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,

எங்களுக்கு இடையில் எந்த மாதிரியான வாதங்கள் நடைபெற்றிருக்கின்றன என்று விராட் கோஹ்லி அல்லது ரவி சாஸ்திரியுடம் கேட்டுப் பாருங்கள். சில நேரங்களில் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க விரும்பாத அளவிற்கு கூட எங்களுடைய வாதங்கள் கடுமையாக சென்றிருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் மறந்துவிட்டு அடுத்த நாளே அவர்கள் என்னிடம் நன்றாக பேசுவார்கள். இதுதான் அவர்களிடம் உள்ள சிறந்த குணம்.

Shastri

மேலும் நாங்கள் சந்திக்கும்போது நான் எடுத்த முடிவில் இருக்கும் நியாயத்தை அவர்கள் அங்கீகரிப்பார்கள் என்று கூறிய அவர், சில நபர்கள் தங்களுடையை பப்ளிசிட்டிக்காக தன்னை விமர்ச்சனம் செய்கிறார்கள் என்றும் கூறினார். 2020ஆம் ஆண்டோடு பிரசாத்தின் பதவிக் காலம் முடிந்துபோனது. அதற்குப் பிறகு அவரை தலைமைத் தேர்வாளராக நியமிக்க விரும்பாத பிசிசிஐ, அந்த ஆண்டு முதல் சேட்டன் சர்மாவை தலைமைத் தேர்வாளராக நியிமித்திருக்கிறது.

chetan-sharma

தேர்வுக் குழு உறுப்பினர்களாக சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங், மொஹன்ட்டி மற்றும் அபே குருவிலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த தேர்வுக் குழு அமைந்த பிறகு கடந்த ஆஸ்திரேலிய தொடரை கைப்பற்றிய இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement