நான் அவரை செலக்ட் பண்ணும்போது யாரும் நம்பல. ஆனா இன்னைக்கு அவரு டாப் பிளேயர் – எம்.எஸ்.கே பிரசாத் பேட்டி

Prasad
- Advertisement -

கடந்த ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு வரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கும், கேலிக்கும் உள்ளாகி வந்த ரிஷப் பன்ட், தற்போது இந்திய டெஸ்ட் அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக உருவெடுத்ததால், அதே கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் வருகிறார். அவருடைய இந்த வளர்ச்சிக்கு அவரின் திறமை ஒரு காரணமாக அமைந்தாலும், அவரின் மேல் நம்பிக்கை வைத்து அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கிய இந்திய தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்த எம்எஸ்கே பிராசத்தும் ஒரு காரணம் என்றே கூற வேண்டும்.

pant 6

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ரிஷப் பன்ட் அறிமுகமான சமயத்தில் அவருடைய அலட்சியமான கீப்பிங் செயல்பாடும், பொறுப்பற்ற பேட்டிங் தன்மையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்பதியை ஏற்படுத்தவே, அவரை இந்திய அணியில் சேர்கக்கூடாது என்று பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் கூறிவந்தனர். ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி, அப்போது விமர்ச்சனத்திற்கு ஆளாகி இருந்தார் எம்எஸ்கே பிரசாத்.

இதுபற்றி தற்போது ஒரு தனியார் விளையாட்டு சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார் அவர். அந்த பேட்டியில் ரிஷப் பன்ட் பற்றி பிரசாத் பேசுகையில், ரிஷப் பன்ட் இவ்வளவு நன்றாக விளையாடுவார் என்று யாரும் அப்போது நம்பவில்லை. அவரால் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியாது என்றும், அவரால் இந்திய அணிக்கு சிறப்பாக கீப்பிங் செய்ய முடியாது என்றும் சராமாரியான விமர்ச்சனங்களை முன்வைத்தனர். ஆனால் இப்போது நடந்தது என்ன? ஆஸ்திரேலிய தொடரில் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்ட அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார்

Pant-2

ரிஷப் பன்ட்டின் பேட்டிங் திறமையே சாஹாவிற்கு பதிலாக அவரை இந்திய அணியில் தேர்வு செய்ததற்கு காரணமாக இருந்தது என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோணிக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு வழங்காமல் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளிலும் ரிஷப் பன்ட்டை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்து விமர்ச்சனத்திற்கு ஆளாகி இருந்த எம்எஸ்கே பிரசாத்திடம் அது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.

Rishab Pant

அந்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்திய அணியின் எதிர்கால நலன் கருதி ஒரு தேர்வுக் குழு தலைவராக எப்படி செயல்பட வேண்டுமோ எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டுமோ அதைத்தான் நானும் செய்தேன். இளம் வீரர்களை உருவாக்குவது ஒவ்வொரு அணிக்கும் முக்கியம் என்பதால் அது போன்ற ஒரு முடிவை நான் எடுக்க வேண்டியதாயிற்று என்றும் அவர் அந்த பேட்டியில் கூறினார்.

Advertisement