இன்னும் ஒரே வருஷத்துல இவர் இந்திய அணிக்காக விளையாடுவார். அதுல சந்தேகமே இல்லை – எம்.எஸ்.கே பிரசாத் நம்பிக்கை

Prasad

இந்தியாவில் நடைபெற்று தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த ஐபிஎல் தொடரில் அனுபவ வீரர்களை காட்டிலும் பல இந்திய இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான அணியில் பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் ஆகிய இந்திய வீரர்கள் ஸ்டாண்ட் பை வீரர்களாக அணிக்குள் தேர்வாகி இருந்தனர்.

avesh khan

அவர்கள் இருவரைத் தவிர மேலும் பல வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் கூடியவிரைவில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வெகுவிரைவில் இந்திய அணிக்காக நிச்சயம் பெங்களூரு அணியை சேர்ந்த துவக்க வீரர் படிக்கல் விளையாடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவரான எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசுகையில் : 20 வயதான படிக்கல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் விளையாடும் விதம் அற்புதமாக உள்ளது அதில் எந்தவித சந்தேகமும் இல்லை குறிப்பாக கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடிய அவர் பெங்களூர் அணிக்காக 450 ரன்களை குவித்து இருந்தார். அதுமட்டுமின்றி விஜய் ஹசாரே தொடரிலும் 727 ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபித்தார்.

Padikkal 1

அதன் பின்னர் தற்போது நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரிலும் ஒரு சதம் அடித்து அசத்தியுள்ளார். இவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை ஆனாலும் அவர் இந்திய அணிக்காக தற்போது உடனடியாக விளையாடிய விட முடியாது. ஓர் ஆண்டு அவர் காத்திருக்கத்தான் வேண்டும் அதன்பிறகு அவர் நிச்சயம் இந்திய அணியில் களமிறங்கி வருங்காலத்தில் இந்திய அணிக்காக முக்கிய வீரராக திகழ்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை மாற்றுக்கருத்தும் இல்லை என எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் இந்திய இளம் பந்துவீச்சாளர்களை புகழ்ந்து பேசிய அவர் : இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் 140 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீசி வருகின்றனர். அதுமட்டுமின்றி கிட்டதட்ட 150 கிலோமீட்டர் தொடும் அளவிற்கு சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இதெல்லாம் இந்திய அணிக்கு ஆரோக்கியமான விடயம் என அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement