விராட் கோலி சறுக்கும் போதெல்லாம் இந்திய அணியை இவரே காப்பாற்றுகிறார் – எம்.எஸ்.கே பிரசாத் புகழாரம்

Prasad

நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கு பெறுவதற்காக விராட் கோஹ்லி தலமையிலான இந்திய டெஸ்ட் அணியானது இங்கிலாந்திற்கு சென்றுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேட்னான விராட் கோஹ்லி எப்படி செயல்பட போகிறார் என்பதே தற்போது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் அவரின் செயல்பாடுதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் தலையெழுத்தையே நிர்ணயிக்கப் போகிறது. இந்நிலையில் இந்திய தேர்வுக் குழுவின் தலமைத் தேர்வாளராக இருக்கும் எம்எஸ்கே பிரசாத், விராட் கோஹ்லியைப் போலவே இந்திய அணியில் தனது பொறுப்பை உணர்ந்து விளையாடும் மற்றொரு வீரரைப் பற்றி வெகுவாக பாரட்டியுள்ளார்.

IND

இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருக்கும் அஜிங்கியா ரஹானே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மிக முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் அற்புதமாக பேட்டிங் விளையாடிய அவர், பொதுவாகவே வெளிநாட்டு ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடும் தன்மை கொண்டவர். எனவே இந்த இறுதிப் போட்டியிலும் அவருடைய ஆட்டம் மிக முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

செய்தியாளர்களிடம் ரஹானேவைப் பற்றி பேசிய எம்எஸ்கே பிரசாத், ரஹானே தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்றுத் தாழ்வுகளை சந்தித்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த வீரர் என்பதை எப்போதுமே நிரூபித்து இருக்கிறார். விராட் கோஹ்லி எப்போதெல்லாம் ரன் அடிக்கத் தவறுகிறாரோ அப்போதெல்லாம் இந்திய அணியில் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து, சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்திருக்கிறார் ரஹானே. எனவே தான் அவருடைய ஏற்றத் தாழ்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளமால் அவரின் மேல் எந்த ஒரு கடுமையான நடவடிக்கையையும் நாங்கள் எடுக்காமல் உள்ளோம்.

Rahane

ஒரு வீழ்ச்சிக்குப் பிறகு அதனைப் பொருட்படுத்தாமல் அடுத்த போட்டியில் அற்புதமாக செயல்படும் அவர், கடந்த ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோஹ்லி இல்லாத இந்திய அணியை ஒரு கேப்டனாகவும் இருந்து அற்புதமாகவும் வழிநடத்தினார் என்பதை நாம் அனைவரும் மறந்துவிடக்கூடாது என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

Rahane

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரின் போது முதல் போட்டி முடிந்ததும், இந்திய அணியின் கேட்னான விராட் கோஹ்லி நாடு திரும்பிவிட்டார். எனவே துணைக் கேப்டனான ரஹானே இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றவும் மிக முக்கிய காரணமாகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement