தோத்துட்டா மட்டும் கெளம்பி வந்துடறீங்க. அதுவேஜெயிச்சிட்டா – விமர்சனங்களுக்காக வருந்திய எம்.எஸ்.கே பிரசாத்

Prasad
- Advertisement -

இந்திய அணி வெற்றி பெறும்போது இந்திய வீரர்களை கொண்டாடும் அனைவரும் தேர்வுக் குழுவை கொண்டாடுவதில்லை என்றும், அதே சமயம் வீரர்கள் தேர்வில் மட்டும் இந்திய தேர்வுக் குழுவை அனைவரும் விமர்சிக்கின்றனர் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் இந்திய தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரை இந்திய தேர்வுக் குழுவின் தலைவராக பிரசாத் இருந்தபோது, வீரர்கள் தேர்வில் அவர் எடுத்த சில கடினமான முடிவுகளால் பெரிதும் விமர்ச்சிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோணிக்கு, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் வாய்ப்பு வழங்காமல் ஒதுக்கி வைத்தது, உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத யுவராஜ் சிங்கை இந்திய அணியில் இருந்து நீக்கியது போன்ற முடிவுகளுக்காக அவர் பெரிதும் விமர்ச்சிக்கப்பட்டிருந்தார். மேலும் சீனியர் வீரர்களை அணயில் இருந்து நீக்கிய அவர், ரிஷப் பன்ட், முஹம்மது சிராஜ் போன்ற திறமையான இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அளித்தார்.

இந்த முடிவுகள் அனைத்தும் அப்போது பெரிதும் விமர்ச்சிக்கப்பட்டு இருந்தாலும், அவர் அப்போது எடுத்த சில கடினமான முடிவுகளால் தான் இப்போது இந்திய அணியானது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பலம் வாய்ந்த அணியாக திகழ்வதற்கு காரணமாக இருக்கிறது. தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து வரும் இளம் வீரர்கள் அனைவரும் தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இதற்கு தொடக்கப்புள்ளி வைத்தது எம்எஸ்கே பிரசாத்தான் என்றால் அது மிகையாகாது. தற்போது தனியார் நாளிதழுக்கு அவர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அந்த பேட்டியில் பேசிய அவர்,

IND

இந்திய அணியில் இளம் வீர்ர்களுக்கு வாய்ப்பு அளித்ததால் நான் அதிகமான விமர்ச்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். ஆனால் அதுபோன்ற திறமையான இளம் வீரர்கள்தான் தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வளர்த்திருக்கின்றனர் என்று கூறிய அவர், உதாரணத்திற்காக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை குறிப்பிட்டு பேசினார்,

- Advertisement -

நட்சத்திர வீரர்கள் இல்லாத இந்திய அணி இளம் வீரர்களுடன் களமிறங்கி ஆஸ்திரேலியாவை அவர்களுடைய சொந்த நாட்டிலேயே வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. ஆனால் அப்போது திறமையான இளம் வீரர்களை தேர்வு செய்த இந்திய தேர்வுக் குழுவை யாரும் பாராட்டவில்லை. அதுவே மூத்த வீரர்களை இந்திய அணியில் இருந்து நீக்கியதற்காக மட்டும் எங்களை பெரிதாக விமர்ச்சித்தார்கள் என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

IND-1

கடந்த 2020ஆம் ஆண்டோடு பிரசாத்தின் பதவிக்காலம் முடிந்துபோனது. அதற்குப் பிறகு அவரை அந்த பதவியில் நீட்டிக்க விரும்பாத பிசிசிஐ, அதன்பிறபு சேட்டன் சர்மாவை தலைமைத் தேர்வாளராக நியமித்திருக்கிறது என்பது குறிபிடத்தக்கது. மேலும் தேர்வுக் குழு உறுப்பினர்களாக ஹர்விந்தர் சிங், சுனில் ஜோஷி, மொஹண்ட்டி மற்றும் அபே குருவிலா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த தேர்வுக் குழு அமைந்த பிறகு இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த இந்திய அணியிலும் பல்வேறு இளம் வீரர்கள் இடம்பிடித்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement