ஓய்விற்கு பிறகு தோனி ஈடுபட வாய்ப்புள்ள 5 புதிய பணிகள். அவருடைய புதிய அவதாரம் – விவரம் இதோ

Dhoni-2

தோனி ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல அவரிடம் கைவசம் பல திறமைகள் இருக்கிறது.
ஒரு தொழிலதிபராக, ஒரு ஆலோசகராக, ஒரு ராணுவ வீரராக பல திறமைகளை தன்னுள் மறைத்து வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது ஓய்வினை அறிவித்துவிட்டு பணி ஓய்விற்குப் பிறகு என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து பார்ப்போம்.

Dhoni

பயிற்சியாளர் :

தோனி கிரிக்கெட் என்பது அல்வா சாப்பிடுவது போல அந்த அளவிற்கு போட்டிகளை சரியாக கணிப்பார். அதேபோல் தனது அணி வீரர்களிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை சரியாக அறிந்து அந்தத் திறமையை எளிதாக ஆடுகளத்தில் கொண்டு வரக்கூடிய வல்லமை படைத்தவர். இப்படிப்பட்ட வீரர் ஓய்விற்கு பிறகு பயிற்சியாளராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏற்கனவே இவர் கிரிக்கெட் அகாடெமி துவங்க இருக்கிறார் என்ற பேச்சும் பரவலாக பேசப்படுகிறது.

Dhoni

ஓவியக் கலைஞர் :

- Advertisement -

தோனி எப்போதும் படங்கள் வரைவதில் ஆர்வமாக இருந்திருக்கிறார் .அந்த பதிவில்.. உங்களிடம் நான் ஒரு ரகசியத்தை பகிர்ந்து கொள்ளப் போகிறேன். சிறு வயதிலிருந்தே நான் ஒரு ஓவியராக மாற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நிறைய கிரிக்கெட் ஆடி விட்டேன். தற்போது ஓவியத்தை கையிலெடுத்து அதற்கான நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன். ஒரு சில ஓவியங்களை வரைந்து இருக்கிறேன் என்று ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Dhoni 1

ராணுவ வீரர்

எல்லையில் பாதுகாப்பு படை வீரராக மாறுவதற்கான தகுதியை எப்போதும் தோனியிடம் இருந்து கொண்டேதான் இருந்தது. அவ்வப்போது இதன் காரணமாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார் என்பதையும் பார்த்திருப்போம். இதனால் இதனையும் அவர் முழுநேரமாக கையில் எடுக்க வாய்ப்பு இருக்கிறது

dhoni 2

அரசியல் :

தோனி திடீரென ஓய்வினை அறிவித்ததற்கு பெரிய அரசியல் காரணங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவரை ஜார்க்கண்ட் முதல்வராக மாற்றுவதற்காக பாரதிய ஜனதா கட்சி அவரை அணுகியதாகவும் ஒரு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தோனி தற்போது வரை தெரிவிக்கவில்லை என்றாலும் இதுவும் இவருக்கு ஒரு மிகப்பெரிய மாற்று வேலையாகத்தான் இருக்கும்

dhoni

விவசாயம் :

தோனி சமீபகாலமாக விவசாயத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். தனது 60 ஏக்கர் பண்ணையில் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்து வருகிறார். பப்பாளி தர்பூசணி போன்றவற்றை விளைவித்து வருகிறார். இதன் காரணமாக இதுவும் அவருக்கு ஒரு முழுநேர தொழிலாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.