தோனி வீட்டில் கொண்டாடப்பட்ட ஓனம் பண்டிகை. என்ன ஸ்பெஷல் தெரியுமா ? – வைரலாகும் புகைப்படம்

Ziva
- Advertisement -

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை வந்து சில வேலைகளை முடித்துக்கொண்டு அதன்பின்னர் தற்போது ஐபிஎல் தொடரில் இரண்டாவது பாதி துவங்க உள்ளதால் பயிற்சியை மேற்கொள்ள முன்னதாக அணி வீரர்களுடன் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார். தோனி மற்றும் குறிப்பிட்ட சில வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முன்னதாக சென்றடைந்தனர்.

Dhoni

- Advertisement -

அதன்படி ஐக்கிய அரபு அமீரகம் சென்ற சிஎஸ்கே அணியானது 6 நாட்கள் குவாரண்டைனை முடித்து தற்போது முதற்கட்ட பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தோனியின் மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் அவர்களது ராஞ்சி வீட்டில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதன்படி தோனியின் மனைவி வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 22 வகையான பாரம்பரிய உணவுகளை கேரள முறைப்படி சமைத்து தனது மகளுக்கு தோனியின் மனைவி பரிமாறி உள்ளார். அதனை தோனி மகள் உண்ணும் படியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஓணம் வாழ்த்துக்களையும் அந்த புகைப்படத்தின் மூலம் தோனியின் மனைவி தெரிவித்துள்ளார்.

ziva

ziva 1

சென்னை அணியின் கேப்டனாக தோனி ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் இருக்க அவர்களது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ஹிட் அடித்துள்ளன. ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து தோனியுடன் இணைவார்கள் என்று தெரிகிறது.

Advertisement