IPL 2023 : அப்டி சொன்னதெல்லாம் சும்மா தான், இந்த வருடத்துடன் அவர் கண்டிப்பா ரிட்டையர் ஆகிடுவாரு – முகமது கைஃப் உறுதி

Kaif
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அதில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 13 போட்டிகளில் 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளதால் டெல்லிக்கு எதிரான கடைசிப் போட்டியில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலைமையில் உள்ளது. முன்னதாக இந்தியாவுக்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்து ஐபிஎல் தொடரிலும் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான திகழும் தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் 2020இல் ஓய்வு பெற்றார்.

Dhoni

- Advertisement -

அதனால் இந்தியாவின் மகத்தான வீரர்களில் ஒருவராக போற்றப்படும் அவர் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை பார்க்க அனைவரும் விரும்புகின்றனர். இருப்பினும் விரைவில் 42 வயதை தொடும் அவர் முழங்கால் வலியுடன் அவதிப்பட்டு வருவதால் இந்த சீசனுடன் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார் போல் தன்னைத் தல என்று கொண்டாடும் தமிழக ரசிகர்களுக்காக தமது கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்று அவர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது 2019க்குப்பின் சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.

ஓய்வு கன்ஃபார்ம்:
அத்துடன் தமது கேரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின் முடிவில் கூறிய அவர் தமக்கு வழி அனுப்பும் வகையில் உள்ளூர் அணியை மிஞ்சி சென்னைக்காக ஆதரவு கொடுத்த கொல்கத்தா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இருப்பினும் அந்த கருத்துக்களை வைத்து இந்த கடைசி தருணத்தில் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறீர்களா? என லக்னோ போட்டியில் டேனி மோரிசன் கேட்ட போது “ஓய்வு பெறுவது பற்றி நீங்கள் தான் முடிவு செய்துள்ளீர்கள் நான் இல்லை” என்று தோனி பதிலளித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

அதனால் அடுத்த வருடம் அவர் நிச்சயம் விளையாடுவார் என்று சென்னை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இருப்பினும் மேற்குறிப்பிட்ட கருத்துக்களை சுட்டிக்காட்டும் முன்னாள் வீரர் முகமது கைஃப் பொதுவாகவே ஆச்சரியப்படும் வகையில் வித்தியாசமான முடிவை எடுக்கும் தோனி இந்த வருடத்துடன் விடை பெறுவதை ஏற்கனவே மறைமுகமாக தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார். அதற்கு ரசிகனை போல் ஓடிச் சென்று ஜாம்பவான் கவாஸ்கர் தன்னுடைய நெஞ்சில் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது மற்றொரு மறைமுகமான எடுத்துக்காட்டு என்றும் கூறும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஐபிஎல் தொடரில் விளையாடுவது இதுவே கடைசி வருடம் என்பதை தெரிவிக்கும் வகையில் எம்எஸ் தோனி ஏற்கனவே போதுமான குறிப்புகளை அளித்துள்ளார் என்று நினைக்கிறேன். ஆனாலும் அவர் தொடர்ந்து இந்த உலகை தனது ஓய்வு பற்றி யூகிக்க வைக்கிறார். அது அவருடைய ஒரு இயற்கை குணமாகும். ஆனால் அடுத்த வருடம் தோனி ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்ற உள்ளுணர்வு எனக்கு தோன்றுகிறது. குறிப்பாக சுனில் கவாஸ்கர் இதற்கு முன் வேறு எந்த வீரர்களிடமும் அது போன்ற ஆட்டோகிராப் வாங்கியதை நாம் பார்க்கவில்லை. சுனில் கவாஸ்கர் போன்ற மகத்தானவர் தன்னுடைய சட்டையில் ஆட்டோகிராப் வாங்குவது தோனியின் மகத்துவத்தை காட்டுகிறது” என்று கூறினார்.

kaif

அவர் கூறுவது போல பொதுவாகவே ஆச்சரியப்படும் முடிவை எடுக்கும் தோனி 2019 உலக கோப்பையில் கடைசியாக இந்தியாவுக்கு விளையாடியிருந்தார். அப்போது மீண்டும் கம்பேக் கொடுப்பாரா என்ற கருத்துக்கள் உலகம் முழுவதிலும் இருந்த நிலையில் திடீரென 2020 சுதந்திர தினத்தில் யாருமே எதிர்பாராத வகையில் சாதாரண இன்ஸ்டாகிராம் பதிவால் தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

இதையும் படிங்க:IPL 2023 : சச்சினின் சாதனையையே முறியடித்த சுப்மன் கில். இதுதெரியுமா உங்களுக்கு? – விவரம் இதோ

மேலும் 2014இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற போதும் சாதாரண அறிக்கையால் விடைபெற்ற அவர் வழியனுப்பும் போட்டிகளை விரும்பாதவராகவே இருக்கிறார். எனவே முழங்கால் வலியால் அவதிப்படும் தோனி இந்த வருடத்துடன் திடீரென ஓய்வு பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Advertisement