CSK vs MI : மும்பை அணிக்கெதிரான இந்த பிரமாதமான வெற்றிக்கு காரணம் இவர்கள் தான் – தல தோனி மகிழ்ச்சி

MS-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் சி.எஸ்.கே அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை குவித்தது.

Ajinkya Rahane.jpeg

- Advertisement -

மும்பை அணி சார்பாக இஷான் கிஷன் 32 ரன்களும், டிம் டேவிட் 31 ரன்களையும் குவித்தனர். ஒரு கட்டத்தில் பவர் பிளேவில் 61 ரன்கள் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த மும்பை அணியானது சென்னை அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சில் சிக்கி மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

அதனை தொடர்ந்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 18.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஹானே 61 ரன்கள் குவித்து அசத்தினார்.

Jadeja

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் ஓவரிலேயே தீபக் சாகரை நாம் இழந்து விட்டோம். அதேபோன்று மகாலா முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகிறார். இப்படி இருந்தும் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி மும்பை அணியை தடுத்து நிறுத்தினார்கள்.

- Advertisement -

குறிப்பாக முதல் 7 ஓவர்களுக்கு பிறகு ஸ்பின்னர்கள் அற்புதமாக பந்து வீசினர். மஹாலா மற்றும் பிரிட்டோரியஸ் இறுதி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசினர். அவர்களை நம்பி நாங்கள் பந்து வீச அழைத்தோம் இறுதி கட்டத்தில் மிகச் சிறப்பாக அவர்கள் இருவரும் பந்து வீசினர். அதேபோன்று துஷார் தேஷ்பாண்டே உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சனை விடுங்க, 2023 உ.கோ’யில் ரிஷப் பண்ட் இடத்தில் விக்கெட் கீப்பராக அந்த 2 பேர் தகுதியானவங்க – பாண்டிங் கருத்து

அவரிடம் இருக்கும் திறமை உறுதியான ஒன்று. ஆனால் நோபால்களை வீசாமல் அவர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். மொத்தத்தில் இந்த போட்டியில் பலமான மும்பைக்கு எதிராக எங்களது பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் வெற்றிக்கு காரணம் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement