தேங்க் யூ தல தோனி : ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான சாதனை கேப்டன் – மாஸ் புள்ளிவிவரம் இதோ

Dhoni-3 IPL
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் சந்திக்கின்றன. இந்த தொடர் துவங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் முதல் போட்டிக்காக அனைத்து ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த நிலையில் முதல் போட்டியில் களமிறங்கும் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த நட்சத்திரம் எம்எஸ் தோனி அந்த பதவியில் இருந்து விலகியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dhoni

- Advertisement -

கேப்டன் தல தோனி:
கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின், கொல்கத்தா அணிக்கு சவுரவ் கங்குலி, பெங்களூர் அணிக்கு ராகுல் டிராவிட் என அந்தந்த மாநில ஜாம்பவான்கள் கேப்டன்களாக இருந்தனர். ஆனால் அதுபோன்ற உச்சபட்ச நட்சத்திர அந்தஸ்து உடைய ஒரு வீரர் தமிழகத்தில் இல்லாத காரணத்தால் 2007-ஆம் ஆண்டு நடந்த வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை யாரும் எதிர்பாராத வண்ணம் இந்தியாவிற்கு வாங்கி கொடுத்த இளம் வீரர் எம்எஸ் தோனியை நம்பிய சென்னை அணி நிர்வாகம் பல கோடிகளை செலவழித்து வாங்கி தங்கள் அணிக்கு கேப்டனாக நியமித்தது.

இருப்பினும் சுமார் 15 வருடங்களுக்கு பின் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரை சேர்ந்த ஒருவர் இன்று தமிழக கிரிக்கெட் ரசிகர்களால் “கேப்டன் கூல் தல தோனி” என தலையில் வைத்துக் கொண்டாடும் அளவுக்கு தமிழக மக்களில் ஒருவராக உருவெடுப்பார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

Dhoni

ஏனெனில் இந்திய அணியை வழிநடத்தியது போலவே கடந்த 2008 முதல் 2021 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுப்பேற்று தலைமை தாங்கிய எம்எஸ் தோனி ஒவ்வொரு வருடமும் அபாரமாக கேப்டன்ஷிப் செய்து சென்னை அணியை ஐபிஎல் வரலாற்றில் ஒரு வெற்றிகரமான அணியாக மாற்றியுள்ளார். ஒருசில அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறுவதற்கு திண்டாடும் நிலையில் தோனி மட்டும் தொடர்ந்து அனைத்து வருடமும் அசால்டாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னையை அழைத்து வந்து 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

- Advertisement -

5 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கூட அவ்வப்போது பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் நடையை கட்டிவிடும். ஆனால் கேப்டனாக வழிநடத்திய 12 தொடர்களில் 11 முறை சென்னை அணியை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வைத்த எம்எஸ் தோனி ஒரு வெற்றிகரமான அணியாக சென்னையை சாதனை படைக்க வைத்துள்ளார். அந்த 11 சீசன்களில் 9 முறை சென்னை அணி பைனலில் விளையாடியுள்ளது. அதில் 4 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் கோப்பைகளின் அடிப்படையில் 2-வது வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது.

dhoni 1

மாஸ் புள்ளிவிவரம்:
தற்போது 40 வயதை கடந்து விட்ட அவர் தனது வயதைக் கருத்தில் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலத்தை மதித்து காலம் காலமாக வகித்து வந்த கேப்டன் பொறுப்பை மற்றொரு நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார். இந்த தருணத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனாக எம்எஸ் தோனியின் செயல்பாடுகளையும் புள்ளிவிவரங்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. முதலில் 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் 4 கோப்பைகளை வென்றுள்ள எம்எஸ் தோனி ஐபிஎல் வரலாற்றில் கோப்பைகளின் அடிப்படையில் 2-வது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

2. அதேபோல் சென்னை அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்த 12 சீசன்களில் 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கும் 9 முறை பைனலுக்கு அழைத்து சென்றுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஒரு அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற கேப்டன், அதிக இறுதிப் போட்டிகளில் விளையாடிய கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

3. அதேபோல் 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் கோப்பைகளையும் வென்றுள்ள அவர் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

CSKvsMI

4. சென்னை மற்றும் புனே ஆகிய அணிகளுக்காக மொத்தம் 204 ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள எம்எஸ் தோனி அதில் 121 வெற்றிகளை 59.60% என்ற வெற்றி சராசரி விகிதத்தில் குவித்துள்ளார். இதில் 82 தோல்விகளைப் பதிவு செய்துள்ளார். 1 போட்டி முடிவின்றி போனது. இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் போட்டிகள் மற்றும் வெற்றிகளின் அடிப்படையில் 5 கோப்பைகளை வென்றுள்ள ரோகித் சர்மாவை காட்டிலும் வெற்றிகரமான கேப்டனாக எம்எஸ் தோனி சரித்திர சாதனை படைத்துள்ளார்.

5. மொத்தம் 204 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ளார். அடுத்த இடத்தில் விராட் கோலி 140 போட்டிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

dhoni 1

5. அந்த 204 போட்டிகளில் 4456 ரன்களை அடித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த 2-வது கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

6. மேலும் இமாலய சிக்சர்களை பறக்க விடுவதில் வல்லவராக திகழும் எம்எஸ் தோனி ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்களை அடித்த 4-வது வீரர் என்ற பெருமையையும் சென்னை அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Dhoni

7. இதுமட்டுமல்லாமல் இது போன்ற மேலும் பல சாதனைகளையும் எத்தனையோ போட்டிகளில் தனது அதிரடியான பேட்டிங், மின்னல்வேக விக்கெட் கீப்பிங், அபாரமான கேப்டன்ஷிப் வாயிலாக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த எம்எஸ் தோனி ஐபிஎல் வரலாற்றில் என்றும் காலத்தால் அழிக்க முடியாத ஒரு மகத்தான கேப்டனாக திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement