வெறும் 4 ரன்ஸ் தான்.. மும்பைக்கு எதிராக மைல்கல் போட்டியில் புதிய சாதனை படைக்க உள்ள தல தோனி

MS Dhoni 5
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி தலா 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகளாக திகழும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள அந்த போட்டியில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அந்த அணிகளுக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இம்முறை சாதாரண வீரர்களாக விளையாடுகின்றனர். அதில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. மறுபுறம் 42 வயதாகும் தோனி வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்துள்ளார்.

- Advertisement -

தல தோனி 250:
கடந்த 2008 முதல் 2023 வரை கேப்டனாக செயல்பட்ட அவருடைய தலைமையில் 14 சீசன்களில் விளையாடிய சென்னை 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று 10 முறை ஃபைனலில் விளையாடி 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது. மேலும் இதுவரை சிஎஸ்கே அணிக்காக 249 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 4996* ரன்கள் அடித்துள்ளார்.

எனவே மும்பைக்கு எதிரான இன்று களமிறங்கும் போது சிஎஸ்கே அணிக்காக 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை தோனி படைப்பார். அவருக்கு அடுத்தபடியாக சின்னத் தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 200 போட்டிகளில் விளையாடி 2வது இடத்தில் உள்ளார். அதே பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 177* போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி 3வது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் தன்னுடைய 250வது மைல்கல் போட்டியில் மும்பைக்கு எதிராக இன்னும் 4 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 5000 ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையையும் தோனி படைப்பார். முதலிடத்தில் சுரேஷ் ரெய்னா 200 போட்டிகளிலேயே 5529 ரன்கள் குவித்து சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக இப்போதும் சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: அதை யார் செய்றாங்களோ அவங்க தான் ஜெய்ப்பாங்க.. மும்பை – சிஎஸ்கே போட்டியின் வெற்றியாளரை கணித்த உத்தப்பா

இருப்பினும் இந்த வருடம் 8வது இடத்தில் களமிறங்கும் தோனி பேட்டிங் செய்ய வருவதை பார்ப்பது அரிதாக இருக்கிறது. அதனால் இந்த சாதனையை அவர் படைப்பாரா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடைசி பந்தில் களமிறங்கி ஒரு பவுண்டரி அடித்தால் கூட அந்த சாதனையை தோனி படைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement