தமிழில் எனக்கு ரொம்ப பிடித்த ஹீரோ இவர்தான். அவர் படமெல்லாம் பார்ப்பேன் – முன்பே சொன்ன தோனி

Dhoni-1

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Suriya

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சூர்யா குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அதில்.. சூர்யாவின் குழந்தைகளிடம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தோனி பல சுவாரசியமான பகிர்ந்து கொண்டார்.

தமிழில் சூர்யா என்னுடைய விருப்பமான நடிகர்களில் ஒருவர். நான் சிங்கம் திரைப்படத்தை நான் மொபைல் மூலம் திரையரங்கில் பார்த்தேன். அதுவும் இந்தியில்தான் பார்த்தேன். ஆனால் தமிழில் வெளியான சிங்கம் படத்தை நண்பர்கள் பார்க்க கூறினார்கள் எனக்கு பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின்னர் விமானத்தில் ஒருமுறை சப்டைட்டிலுடன் சூர்யா நடித்த சிங்கம் படத்தை பார்த்தேன்.

Suriya 2

அவரது நடிப்பு என்னை கவர்ந்து விட்டது. அவர் ஒரு அற்புதமான நடிகர் அவருடைய கஜினி திரைப்படத்தையும் பார்த்திருக்கிறேன். ஒருமுறை மும்பை தாஜ் ஹோட்டலில் ஒரே இடத்தில் தங்கி இருந்தோம். அப்போது அவரை சந்தித்து இருக்கிறேன். எனக்கு பிடித்த தமிழ் நடிகர் அவர்தான் என்று கூறியுள்ளார் தோனி.

- Advertisement -

suriya 1

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. சூர்யாவும் ஏற்கனவே தோனி தான் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்றும், தனக்கு பிடித்த மிகச் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் அவர் தான் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.