
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு நடைபெறும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் தற்போது 44 வயதாகும் அவர் ஏற்கனவே சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதனால் பல சவால்களையும் அவர் ஆண்டுதோறும் எதிர்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக முழங்கால் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இறுதி நேரங்களில் மட்டுமே களமிறங்கி பேட்டிங் செய்து வந்தார். அதன் காரணமாக இந்த ஆண்டு 2026 ஐபிஎல் தொடரில் அவர் பெரும்பாலும் இம்பேக்ட் பிளேராக மட்டுமே விளையாடுவார் என்றும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த 2026 ஐபிஎல் தொடரானது இன்று ஆரம்பிக்கும் வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தோனி முதல் 2 வாரங்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :
மகேந்திர சிங் தோனி தற்போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவர் அந்த காயத்திலிருந்து வெளியேறும் வகையில் தற்போது தயாராகி வருவதால் முதல் இரண்டு வாரங்கள் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டது ஏன்? – கோச் கொடுத்த விளக்கம்
இப்படி தோனி முதல் இரண்டு வாரங்கள் விளையாடமாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. இப்படி தோனி முதல் 2 வாரங்கள் விளையாடமாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதால் இந்த செய்தி சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.