- Advertisement -
ஐ.பி.எல்

20 நாட்களுக்கு முன்னதாக சென்னை வந்தடைந்த தல தோனி.. 43 வயதிலும் இப்படி ஒரு டெடிகேஷனா? – விவரம் இதோ

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 17 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் தொடரானது மார்ச் மாதம் 22-ஆம் தேதி துவங்கி மே மாதம் 25-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐ.பி.எல் தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே நிர்வாகத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.

சென்னை வந்தடைந்தார் தல மஹேந்திர சிங் தோனி :

இதன் காரணமாக எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரானது அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இறுதிவரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பும் இந்த தொடரை கைப்பற்றப்போகும் அணி குறித்த விவாதங்களும் தற்போதே ரசிகர்கள் மத்தியில் சூடு பிடிக்க துவங்கியுள்ளன.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடருக்காக தயாராக தற்போதே ஆயுத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனி இன்று ராஞ்சியிலிருந்து சென்னை வந்தடைந்துள்ளார். அவருக்கு சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்படி சென்னைக்கு தோனி வர காரணம் யாதெனில் :

- Advertisement -

மார்ச் மாதம் 22-ஆம் தேதி ஐபிஎல் தொடரானது துவங்க உள்ளதால் அதற்கு முன்னதாக இந்த தொடருக்காக தயாராகும் வகையில் நடைபெற இருக்கும் பயிற்சி முகாமில் அவர் இளம் வீரர்களுடன் கலந்து கொண்டு பயிற்சி பெறவே இங்கு வந்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே சிஎஸ்கே பயிற்சி முகாமிற்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், குர்ஜப்நீத் சிங், ஆண்ட்ரே சித்தார்த் போன்ற சில வீரர்கள் வந்துள்ள வேளையில் அவர்களுடன் கலீல் அகமது, அன்சுல் கம்போஜ், கமலேஷ் நாகர்கோட்டி ஆகிய வீரர்களும் வந்து பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு உண்மைக்கு காரணம் இதுதான்.. சாக்கு போக்கு சொல்ல விரும்பல – பாக் கோச் அதிரடி

இந்நிலையில் தற்போது 43 வயதான எம்.எஸ் தோனி இளம் வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ள இருப்பது ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆண்டு தோனிக்கு கடைசி சீசன் என்பதினால் இந்த தொடரில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -