தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா பாசிட்டிவ். வெளியேற முடியாத சிக்கலில் தோனி – விவரம் இதோ

- Advertisement -

இந்தியாவில் தற்பொழுது கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை இந்தியாவில் மொத்தமாக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா மிக அதிகமாக பரவி கொண்டு வரும் வேளையில் பொதுமக்கள் மிகப்பெரிய அச்சத்தில் உள்ளனர். அவர்களின் அச்சத்தை அதிகப்படுத்தும் விதமாக நேற்று மட்டும் இந்தியாவில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா எப்படி வருகிறது எனத் தெரியாமல் திக்குமுக்காடி வரும் இந்திய மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

Corona-1

- Advertisement -

கொரோனா காரணமாக தற்பொழுது வரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வர மருத்துவமனைகளை நோக்கி செல்கின்றனர். ஆனால் அங்கே அவர்களுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை எடுத்துக் கொள்ள படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடுடன் இருக்கிறது. ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாத காரணத்தினால் ஒரு சிலர் இறந்த சோகம் மிகப்பெரிய வேதனையை தருகிறது. இந்தக் கொரோனா முக்கியமாக மகாராஷ்டிரா,உத்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மிக அதிகமாக பரவி வருகிறது.

sakshi

இந்நிலையில் மகேந்திர சிங் தோனியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக அவர்களுக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் தற்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களை காண மகேந்திர சிங் தோனி போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் முடியும் வரை அணியிலிருந்து வெளியே எங்கும் செல்லக்கூடாது.

Dhoni

அப்படி சென்று மீண்டும் அணியில் இணைந்தால் கொரோனா பரிசோதனைக்கு பிறகு 7 நாட்கள் குவாரன்டைனில் இருந்தே அணியில் இணைய முடியும். இதன்காரணமாக அவர் தொடரில் இருந்து வெளியேற முடியவில்லை. எனவே இன்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி எப்போதும் போல விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மகேந்திர சிங் தோனியின் பெற்றோரை முழு நேரமும் கண்காணித்துக் கொள்ள தகுந்த ஏற்பாடுகளை அவர் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement