- Advertisement -
ஐ.பி.எல்

ப்ரேவிஸ்க்கு நன்றி.. சிஎஸ்கே வெற்றிக்கு அந்த 2 பேர் காரணம்.. 2026க்கு இந்த திட்டத்தை உருவாக்குறோம்.. தோனி பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி கொல்கத்தாவில் 57வது போட்டி நடைபெற்றது. அதில் கொல்கத்தாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய சென்னை தங்களுடைய 3வது வெற்றியைப் பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா கேப்டன் ரகானே 48, மணிஷ் பாண்டே 38*, ரசல் 38 ரன்கள் எடுத்த உதவியுடன் 180 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் துரத்திய சென்னைக்கு ஆயுஷ் மாத்ரே 0, கான்வே 0, அஸ்வின் 8, ஜடேஜா 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதிரடி காட்ட முயற்சித்த உர்வில் படேல் 31 (11) ரன்கள் விளாசி அவுட்டானதால் 60/5 என சிஎஸ்கே தினறியது. அப்போது அதிரடியாக விளையாடிய தேவால்ட் 52 (25) ரன்கள் விளாசி திருப்புமுனையை உண்டாக்கினார்.

- Advertisement -

சென்னை வெற்றி:

அதைப் பயன்படுத்திய துபே 45, தோனி 17*, கம்போஜ் 4* ரன்கள் எடுத்து சென்னையை கடைசி ஓவரில் வெற்றி பெற வைத்தனர். கொல்கத்தாவுக்கு வைபவ் அரோரா 3 விக்கெட்டுகள் எடுத்தும் முக்கியமான தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இந்தப் போட்டியில் ப்ரேவிஸ், துபே ஆகியோருடைய ஆட்டமே சென்னையின் வெற்றிக்கு காரணம் என்று தோனி தெரிவித்துள்ளார்.

அத்துடன் சில போட்டிகளில் ஆல் அவுட்டானாலும் கவலைப்படாமல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கும் திட்டத்தையும் பேட்ஸ்மேன்களையும் தயார் செய்து வருவதாகவும் தோனி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது. “நாங்கள் 2 தானா வென்றோம்? இது நாங்கள் வென்ற மூன்றாவது போட்டியாகும். வெற்றி பெற்ற அணியாக இருப்பது நல்லது. இந்த வருடம் சில விஷயங்கள் எங்கள் வழியில் செல்லவில்லை”

- Advertisement -

2026க்கு தயாராகும் சென்னை:

“நீங்கள் நிதர்சனத்துடன் இருப்பது முக்கியம். எது தவறாக சென்றது என்பதைக் கண்டறிய வேண்டும். எங்கள் அணியை நிரப்ப 25 வீரர்கள் இருப்பதால் அதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த வருடத்திற்கான பதில்கள் எங்களுக்கு வேண்டும். எந்த பேட்ஸ்மேன் எந்த இடத்தில் பொருந்துவார்? எந்த பவுலர் எந்த சூழ்நிலையில் அசத்துவார்? என்ற பதில்கள் வேண்டும்”

“நீங்கள் பயிற்சியில் பார்த்த வீரர்களுக்கு வாய்ப்பளித்து எப்படி அவர்கள் போட்டியில் அசத்துகிறார்கள்? என்பதைப் பார்க்க வேண்டும். அவர்களுடைய திறமையைக் காட்டிலும் மனதளவிலான பலம் மற்றும் விழிப்புணர்வை பார்ப்பது அவசியம். இப்போட்டியில் ஸ்பின்னர்களை வெளியே வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அதிரடி காட்டிய ப்ரேவிஸ்க்கு நன்றி. அவர் ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்து விளையாடும் வசதியைக் கொடுத்தார்”

இதையும் படிங்க: 6, 4, 4, 6, 6, 4.. ப்ரேவிஸ் மாஸ்.. 6 வருடம் கழித்து.. 60/5 டூ 183/8 போராடிய சிஎஸ்கே வரலாறு காணாத வெற்றி

“வருண், நரைனுக்கு எதிராக எதிராக விக்கெட் விடாமல் விளையாட துபே முயற்சித்தார். இது பெரிய மைதானம் இல்லை என்றாலும் நான் தான் கடைசி பேட்ஸ்மேன் என்பதை மறக்காமல் விளையாட வேண்டியிருந்தது. மிகவும் கணக்கு போட்டு விளையாடிய துபே 2 சிக்ஸர்கள் அடித்தது ரன்ரேட்டை கீழே கொண்டு வந்தது” என்று கூறினார்.

- Advertisement -