நாளை மதியம் 2 மணிக்கு ஒரு எக்சைட்டிங் நியூஸ் உங்களுக்காக காத்திருக்கு – தோனி வெளியிட்ட திடீர் பதிவு

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட்டிற்காக மிகச் சிறப்பான பங்கினை ஆற்றியவர். ஐ.சி.சி நடத்திய மூன்று வகையான உலகக் கோப்பையையும் வென்று கொடுத்த ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றவர். கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வினை அறிவித்தார்.

அப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்ததன் பின்னர் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த அவர் சென்னை அணிக்காக சொந்த மண்ணில் (சேப்பாக்கத்தில்) விளையாடிவிட்டு தமிழக ரசிகர்கள் மத்தியில் தான் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக இந்த ஆண்டு நிச்சயம் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடுவார் என்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தும் விதத்தில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி சமூகவலைதளத்தில் பெரிதாக ஆக்டிவாக இல்லாமல் இருக்கும் தோனி இன்று அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் உங்களுக்கு ஒரு எக்ஸைட்டிங் ஆன நியூஸை சொல்ல உள்ளேன். அனைவரையும் அங்கு காண்கிறேன் என்று ஒரு ட்வீட் செய்துள்ளார்.

அவரது இந்த பதிவு எதற்காக? தோனி என்ன கூறப்போகிறார்? என்பது குறித்த ஆவல் தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நாளை மதியம் நேரலையில் தோனி சமூக வலைதளத்தில் என்ன கூறப்போகிறார் என்பது குறித்த பெரிய பரபரப்பு தற்போதே சமூகவலைதளத்தை ஆட்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement